Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நாகரிகம் இருந்தா வரமாட்டார்.. தயாரிப்பாளர் சங்க தேர்தல் விவகாரத்தில் விஷாலை விளாசிய பாரதிராஜா!
சென்னை: நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட விஷால் வரமாட்டார் என இயக்குநர் பாரதி ராஜா சாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த நடிகர் விஷாலின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்தது. அதன்பிறகு தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் இழுபறியாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தமிழக அரசு தனி அதிகாரி ஒருவரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

உத்தரவு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விஷால் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 30 ஆம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கேயார், முரளிதரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பாரதிராஜா
அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா நடிகர் விஷாலை விளாசி தள்ளினார். அவர் பேசியதாவது, தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் என்பது தேவை இல்லை. ஒற்றுமை இல்லாமல் அனைவரும் பல அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். தலைவர் பதவிக்கு வருபவர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்க வேண்டும்.

அடையாளத்தை தொலைத்து
ஆனால் பலதரப்பட்ட போட்டி வரும்போது சேவை மனப்பான்மை இருக்காது. ஆகவே தான் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களில் முக்கியமான சிலர் கூடிப் பேசி ஒரு நல்ல தலைவரை தேர்வு செய்யலாம் என நினைக்கிறோம். பதவிக்கு வரும் நபர்கள் தன்னுடைய அடையாளத்தை தொலைத்து விட்டு செயலாற்ற வேண்டும். தேர்தல் இல்லாமல் வயதில் மூத்த தயாரிப்பாளர்கள் சொல்வதை கேட்டு ஒத்துப் போகும் ஒருவர் வர வேண்டும்.

நாகரிகம் இருந்தால்
நடிகர் விஷால் மீது பல்வேறு ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை. எனவே நாகரிகம் தெரிந்தவராக இருந்தால் இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று விஷால் வரமாட்டார். பொது வாழ்வில் குற்றம் இல்லாதவர் தான் தேர்தலில் நிற்க வேண்டும் என காட்டமாக பேசினார் இயக்குநர் பாரதிராஜா.