twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாள, தமிழ் சினிமாக்களை விட தெலுங்கு சினிமாதான் பெஸ்ட்... என்ன இப்படி சொல்லிட்டாரு பாரதிராஜா!

    |

    சென்னை : நடிகர் கருணாஸ் நாயகனாக நடித்து விரைவில் திரையில் வெளியாகவுள்ள படம் ஆதார். இந்தப் படத்தில் கருணாஸ் நாயகான நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் சென்னையின் பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    ரஜினியை பீஸ்டுக்கு எதிராக பயன்படுத்தும் நெட்டிசன்கள்.. மவுனம் கலைப்பாரா?ரஜினியை பீஸ்டுக்கு எதிராக பயன்படுத்தும் நெட்டிசன்கள்.. மவுனம் கலைப்பாரா?

    நடிகர் கருணாஸ்

    நடிகர் கருணாஸ்

    நடிகர் கருணாஸ் பல வருடங்களாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரை காமெடியனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக, நாயகனாக பல படங்களில் நாம் பார்த்துள்ளோம். அரசியலிலும் இவர் ஈடுபட்டுள்ள நிலையில், சில காலங்கள் இவர் நடிப்பில் ஈடுபடாமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

    கருணாசின் ஆதார் படம்

    கருணாசின் ஆதார் படம்

    தற்போது இவர் நாயகனாக நடிக்கும் ஆதார் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இசை வெளியீடு, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    இசையை வெளியிட்ட பாரதிராஜா

    இசையை வெளியிட்ட பாரதிராஜா

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிராஜா, படத்தின் இசையை வெளியிட்டார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் அதை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

    பாரதிராஜா மகிழ்ச்சி

    பாரதிராஜா மகிழ்ச்சி

    பொதுவாக இத்தகைய நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொள்ள விரும்புவதில்லை என்றும் ஆனால் தற்போது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஏனென்றால் இத்தகைய நிகழ்ச்சிகளில்தான் கலைஞர்களை சந்திக்க முடிவதாகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    கண்ணீரை வரவழைத்த கருணாஸ்

    கண்ணீரை வரவழைத்த கருணாஸ்

    அடுத்த ஜென்மத்திலும் தான் மீண்டும் சினிமாக்காரனாகவே பிறக்க விரும்புவதாகவும் அதுதான் தன்னுடைய ஆசை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆதார் படத்தின் முன்னோட்டத்தை தான் பார்த்ததாகவும் கருணாசின் நடிப்பு தனக்கு கண்ணீரை வரவழைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

    அருண் பாண்டியனின் கவலை

    அருண் பாண்டியனின் கவலை

    சினிமா நிறுவனங்களில் கிடைக்கும் பேரும் புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை என்று பேசிய பாரதிராஜா, சினிமாதான் நல்ல தொழில் என்றும் குறிப்பிட்டார். ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாயாக இருக்கும் நிலையில் 70 ரூபாய் செலவில் அந்த தயாரிப்பு உருவாவதாகவும் அந்தக் கவலையில்தான் நடிகர் சம்பளம் குறித்து நடிகர் அருண் பாண்டியன் பேசியுள்ளதாகவும் பாரதிராஜா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகர்கள் சம்பளம் குறித்து பாரதிராஜா

    நடிகர்கள் சம்பளம் குறித்து பாரதிராஜா

    அருண் பாண்டியன் தயாரிப்பாளராகவும் இருந்த நிலையில், ஒரு தயாரிப்பில் தயாரிப்பாளர்களின் பங்கு குறித்து உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார். நடிகர்கள் சம்பளம் வாங்குவது தவறென்று சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தெலுங்கு படங்கள்தான் பெஸ்ட்

    தெலுங்கு படங்கள்தான் பெஸ்ட்

    தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய சூழலில் தமிழ், மலையாளப் படங்களை காட்டிலும் தெலுங்குப் படங்கள் ஒரு படி சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் பிரம்மாண்டமாக செலவழித்து தெலுங்குப் படங்களில் உற்சாகப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    English summary
    Director Bharathiraja hails Telugu film industry
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X