‘தனுஷ் 44‘ படத்தில் இணைந்த பாரதிராஜா… இணையத்தில் வெளியான பரபரப்பு தகவல் !
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 44வது படத்தை இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார். இப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இணைந்துள்ளார்.
பாரதிராஜா எந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற விவரம் எதுவும் வெளியாக வில்லை.
மாரி படத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப்பிறகு தனுஷ் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

வெற்றி பெற்ற கர்ணன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கடைசியாக மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது. விமர்சன ரீதியாகவும் , வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்றது.

தி க்ரே மேன்
கர்ணன் படத்தை முடித்தக் கையோடு நடிகர் தனுஷ், ஹாலிஹட் திரைப்படமான தி க்ரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆண்டனி ரூசோ , ஜோ ரூசோ ஆகியோரின் இயக்கத்தில் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், ஆனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து தனுஷ் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

மாறன்
தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாறன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் தனுஷ் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏறக்குறைய படமாக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.

தனுஷ்44
தனுஷின் 44வது படமாக உருவாகவுள்ள இப்படத்தை மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் நீண்ட நாட்களாகவே மித்ரன் ஜவஹர் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இரு கதாநாயகிகள்
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் திரைப்படங்களைப் போன்றே காதல் திரைப்படமாக தனுஷ்44 திரைப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில், நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் என இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரி கால காதல்
இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்ககப்படுகிறது. இப்படம் இரண்டு காலகட்டங்களில் நடப்பதாக எடுக்கப்பட உள்ளதாம். ஒன்று கல்லூரி நாட்களில் நடப்பதாகவும், மற்றொன்று முதிர் பருவத்தில் உள்ளதை போன்றும் எடுக்கப்பட உள்ளதாம். இரண்டு காலகட்டங்களிலும் ஏற்படும் காதலே படத்தின் மையக்கதையாம்.

ராஷி கன்னா படுபிஸி
ராஷிகன்னா தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்திலும், ஜீவாவுடன் மேதாவி படத்திலும் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பக்கா கமர்ஷியல் மற்றும் தேங்க்யூ ஆகிய திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

விரைவில் படப்பிடிப்பில்
நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகிவரும் அருண்விஜய்33 படத்தில் நடித்து வருவதால், முதலில் தனுஷ் ராஷி கன்னா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. அருண்விஜய் 33 படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, தனுஷ்44 படக்குழுவினரோடு பிரியா பவானி சங்கர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிராஜா இணைந்தார்
இந்நிலையில் தனுஷ் 44 திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற விவரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

அனிருத் இசை
தனுஷ் 44 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மாரி திரைப்படத்திற்குப்பிறகு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப்பிறகு தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











