உடல் நலக்குறைவு.. சிகிச்சை பெற்றுவந்த பிரபல இயக்குனர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

By

பெங்களூரு: பிரபல நடிகரும் இயக்குனருமான கிருஷ்ணமூர்த்தி உடல்நிலை காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.

இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமா துறையில் பல பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழியில் பல சினிமா பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.

புடல் கிருஷ்ணமூர்த்தி

புடல் கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில் பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான புடல் கிருஷ்ணமூர்த்தி உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். கடந்த சில நாட்களாக வயது முதிர்வால் ஏற்படும் பிரச்னைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார்.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

அவருக்கு மனைவி தனலட்சுமி, மகன் விஸ்வஸ், மகள் பாவனா ஆகியோர் உள்ளனர். அவருடைய இறுதிச் சடங்கு பெங்களுரில் நேற்று நடந்தது. இதில் அவருடைய உறவினர்கள் மற்றும் சினிமா துறையினர் கலந்துகொண்டனர். கிருஷ்ணமூர்த்தியின் மறைவை அடுத்து கன்னட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சீதாஞ்சனேயா

சீதாஞ்சனேயா

மறைந்த கிருஷ்ணமூர்த்தி, பழம்பெரும் கன்னட இயக்குனர் சித்தலிங்கையாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். பின்னர், எரடு தண்டேயா மெலே, ஒலவினா கனிகே, சீதாஞ்சனேயா, சுபலங்கா, லாஞ்சா சாம்ராஜ்யா உட்பட பல சிறந்தப் படங்களை இயக்கியுள்ளார்.

சிரஞ்சீவி சார்ஜா

சிரஞ்சீவி சார்ஜா

பின்னர் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். புரொபசர், ஶ்ரீகந்தா, அரிஷினா கும்குமா, பல் நன் மகா, நிர்ணயா உட்பட பல படங்களில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. கன்னட சினிமாவில் சிரஞ்சீவி சார்ஜா, ராக்லைன் சுதாகர், கொடக்கனுர் ஜெயகுமார், சந்தம்மா உட்பட சிலர் இந்த வருடம் உயிரிழந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X