»   »  தேசிய விருது பெற்றதும் ஆளே மாறிட்டாருங்க.. - பாபி சிம்ஹா மீது இயக்குநர் புகார்

தேசிய விருது பெற்றதும் ஆளே மாறிட்டாருங்க.. - பாபி சிம்ஹா மீது இயக்குநர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேசிய விருது பெற்ற பிறகு பாபி சிம்ஹா முழுவதும் மாறிவிட்டார். படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பே தரவில்லை, என்று இயக்குநர் மருதுபாண்டியன் புகார் தெரிவித்தார்.

ஜிகர்தாண்டா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹாதான் இப்போது கோடம்பாக்கத்தின் பரபர மனிதராகிவிட்டார்.

இவர் ஆரம்பத்தில் நடித்த படம் 'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.' இந்தப் படத்தில் பாதியிலேயே நடிக்காமல் போய்விட்டதாக பாபி சிம்ஹா குறித்து ஏற்கெனவே புகார் கூறினர்.

Director charges against Bobby Simha

குறும்படம் என்று கூறி நடிக்க அழைத்தவர்கள், கடைசியல் பெரிய படம் எடுத்து ஏமாற்றிவிட்டார்கள் என பாபி சிம்ஹா கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்து ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் இயக்குநர் மருது பாண்டியன் கூறுகையில், "இந்தப் படத்துக்காக பாபி சிம்ஹாவை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தேன். இதுதான் அவர் நாயகனாக அறிமுகமான முதல் படம். 67 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 30 நாட்களுக்கு மேல் நடித்து கொடுத்தார். ஆரம்பத்தில் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார்.

ஆனால் ஜிகர்தண்டா படம் ஹிட்டானதும் அவர் ஆளே மாறிவிட்டார். ஐந்து நாட்கள் நடிக்க வேண்டிய காட்சிகள் பாக்கி இருந்தன. அவற்றை முடித்துக் கொடுக்க மறுத்துவிட்டார்.

இப்போது என் நிலைமை வேறு. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படத்தின் கணக்கு வழக்குகளை என்னிடம் ஒப்படையுங்கள். அந்த படத்துக்கான வசூலில் பாதியை எனக்கு தருவதாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்போதுதான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

பல மாதங்கள் காத்திருந்தோம். விஜய் சேதுபதி மூலம் சமரசமும் பேசினோம். ஆனால் நடிக்க வரவில்லை. டப்பிங் பேசவும் மறுத்து விட்டார். இதனால் அவர் நடிக்காமல் விட்ட சீன்களை வேறு ஒருவரை நடிக்க வைத்து முடித்துவிட்டோம். வருகிற 10-ந்தேதி படம் ரிலீசாகிறது.

இதை குறும்படம் என்று பாபி சிம்ஹா கூறி இருப்பது தவறு. 2 மணி நேரம் 15 நிமிடம் படம் வந்துள்ளது. அவரிடம் கதை சொன்னபோதே 115 சீன்கள் விளக்கினேன்.

திரைப்பட துறையில் சாதிக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள் பற்றிய கதையே இப்படம். இந்த படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, ‘நாயகன்' படத்துக்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் என பாராட்டினார்," என்றார்.

English summary
Chennai Ungalai Anbudan Varaverkirathu movie director Maruthu Pandian alleged that actor Bobby Simha has no co operated to complete the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil