Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! 12 அமைச்சர்கள் -19 மாவட்டச் செயலாளர்கள் கொண்ட டீமை களமிறக்கிய திமுக!
- Finance
Budget 2023: வங்கிகளுக்கு மூலதனம் ஒதுக்கீடு இருக்க வாய்ப்பில்லையாம்..அப்படின்னா கடன்?
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
வெறும் 48 வயசு தான்.. நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு.. வீட்டுக்கு நேரில் சென்று பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2, அண்ணாத்த, ப்ரோ டாடி உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.
Recommended Video
குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வரும் நடிகை மீனாவின் வீட்டில் திடீரென இப்படியொரு சோகம் நிகழும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் வெறும் 48 வயதில் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கும், பிரபலங்களுக்கும் அளித்துள்ளது. சோஷியல் மீடியாவை தாண்டி பல பிரபலங்கள் நேரிலேயே சென்று நடிகை மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மீனா
கணவர்
மரணம்..போனில்
அழைத்து
ஆறுதல்
கூறிய
ரஜினிகாந்த்

உடைந்து போன மீனா
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடிகை மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றனர். நுரையீரலில் வித்யாசாகருக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாற்று நுரையீரல் கிடைக்காமல் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில், மீனா உடைந்தே போய் விட்டார்.

பிரபலங்கள் இரங்கல்
நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் போன் மூலமாகவும் நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். #Meena ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மீனாவின் கணவர் உயிரிழந்த சோகத்தை பொறுக்க முடியாமல் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மீனாவின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காலை முதலே திரை பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.

லக்ஷ்மி நேரில் அஞ்சலி
பழம்பெரும் நடிகை லக்ஷ்மி நடிகை மீனாவின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ள வீடியோ வெளியாகி உள்ளது. முன்னதாக நடிகை ரம்பாவும் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்திருந்தது குறிப்ப்பிடத்தக்கது. மேலும், பல பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

இயக்குநர் சேரன் அஞ்சலி
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் சேரன் இயக்கத்தில் நடிகை மீனா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த சோக செய்தியை கேட்ட உடனே மீனாவின் வீட்டுக்கு வந்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் நடிகை மீனாவுக்கும் அவர் ஆறுதல் கூறியுள்ளார்.