Just In
- 5 hrs ago
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
- 6 hrs ago
அடக் கடவுளே.. இப்படியெல்லாம் பண்ண முடியுமா? இளைஞர்களை மெர்சலாக்கிய பிரபல நடிகை!
- 7 hrs ago
ரீமேக்காகும் முந்தானை முடிச்சு.. பாக்யராஜை சந்தித்த சசிக்குமார் வைரலாகும் போட்டோஸ்!
- 8 hrs ago
திடீரென #Bahubali2 டிரெண்டாக என்ன காரணம் தெரியுமா? வேற யாரு நம்ம வாத்தியாரு மாஸ்டர் தான்!
Don't Miss!
- News
ஆளும் கட்சியாக மாற வாய்ப்பே இல்ல... ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்.. செம சோகத்தில் காங்கிரஸ்
- Automobiles
மறைப்பு எதுவுமில்லாமல் இந்தியாவில் காட்சிதந்த 2021 மினி 3-கதவு ஹேட்ச்பேக்!! அறிமுகம் எப்போது?
- Sports
ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குதா.. பிட்ச் சர்ச்சைக்கு இடையே ரவி சாஸ்திரி போட்ட சுவாரஸ்ய ட்வீட்
- Finance
இன்போசிஸ்-க்கும் தோனிக்கும் இப்படி ஒரு கனெக்ஷன் இருக்கா..?!
- Lifestyle
விரதம் இருக்கும்போது நீங்க காபி குடிக்கலாமா? அப்படி குடிச்சா என்ன நடக்கும் தெரியுமா?
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நடிகர்கள் சரியாக நடித்தால்..பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.. சேரன் பேச்சு
சென்னை : நடிகர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு அவர்களை கொண்டு செல்வார்கள் என்று இயக்குனர் சேரன் கூறினார்.
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர் சேரன் மற்றும் பிக்பாஸ் தர்ஷன் பெற்றுக் கொண்டனர்.

தயாரிப்பாளர் எடிட்டர் மோகன் பேசும் போது, நான் கொஞ்சம் உண்மையை பேசுறவன், தப்பா நினைக்காதீங்க, நீங்க நிம்மதியா இருந்தால் தான் நன்றாக இருக்க முடியும் என்றார். நான் ஒரு எடிட்டர், தயாரிப்பாளர், நான் தயாரித்த படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது என்றார். இந்த விழாவில் நடிகை சர்மிளாவிற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
பிக்பாஸ் புகழ் தர்ஷன் பேசும் போது, இந்த விழாவில் கலந்துகொண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திரை உலகில் இருப்பவர்களுக்கு நிதி உதவி வழங்குவது சிறந்த விஷயம். இதில் நானும் இருப்பதை நினைக்கும் போது பெருமை கொள்கிறேன் என்றார். பத்திரிக்கையாளர்கள் தான் நடிகர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள் என்றார்.
இயக்குனர் சேரன் பேசும்போது, இது எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. படைப்புகளை முதலில் கணிப்பது பத்திரிக்கையாளர்கள் தான். இவர்களை பார்க்கும் போது எப்போதும் பயமாகவே இருக்கும். உதவி செய்யும் நோக்கம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். இவ்விழாவில் உதவி செய்வது மகிழ்ச்சி என்றார். சர்மிளாவின் நிலைமை வருத்தமளிக்கிறது. கவனக்குறைவால் நிறையபேருக்கு இதுபோல் நடக்கிறது. இவருக்கு உதவி செய்வது ஊக்கம் தருவது போன்றது என்றார் சேரன்.

பத்திரிக்கையாளர்கள் பிரிந்து இருப்பது காலத்தின் சூழல். அது அப்படி தான் சேரும் பிரியும். நான் இதுவரை 23 படங்கள் கடந்து வந்திருக்கிறேன். பாரதி கண்ணம்மா படத்தை கொண்டாடியது பாத்திரிக்கையாளர்கள் தான் என்றார். நடிகர்கள் தங்கள் பணியை சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்றார்.
தற்போது நிறைய தொலைக்காட்சி சேனல்கள் பெருகி வருகின்றன. அதை கட்டுப்படுத்த வேண்டும். குறைய சொல்ல முடியாத அளவுக்கு படம் எடுக்க வேண்டும். நிறைய நல்ல படங்கள் காணாமல் போகிறது. எல்லா எழுத்துக்களிலும் கம்பீரம் இருக்க வேண்டும் என்றார்.
நடிகை சர்மிளா பேசும்போது, "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் எனக்கு இன்று நல்ல வழி பிறந்திருக்கிறது. எங்கள் அப்பாவிற்கு நிறைய பத்திரிகை நண்பர்கள் இருந்தார்கள். ஒரு வரியில் செய்தியை சொல்லி அதன் மூலம் பத்திரிகையை வாங்க வைப்பது பெரிய விஷயம். நடிகர்களுக்கு பத்திரிக்கையாளர்கள் முதுகெலும்பாக இருக்கிறார்கள். எனக்கு உதவி செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பின்னணி பாடகி பி.சுசிலா பேசும் போது, நான் இந்த விழாவிற்கு வர கவிதாதான் காரணம், எனக்கு என்ன பேசுறது தெரியல, பத்திரிக்கையாளர்கள் எங்களுக்கு துணையாக இருக்கிறார்கள். எனக்கு தமிழ் சொல்லி கொடுத்தது மெய்யப் செட்டியார். அதனால் தான் இப்போது என்னால் தமிழில் பேச முடிகிறது என்றார். விழாவில் "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை பாடினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் சேரன், பாடகி பி.சுசிலா, எடிட்டர் மோகன், பிக்பாஸ் புகழ் தர்ஷன், நடிகை சர்மிளா ஆகியோரை சங்கத்தின் தலைவர் கவிதா வரவேற்று பேசினார்.