»   »  வரிவிதிப்புக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததற்கு தேங்க்ஸ் ரஜினி சார்! - இயக்குநர் சேரன்

வரிவிதிப்புக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததற்கு தேங்க்ஸ் ரஜினி சார்! - இயக்குநர் சேரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேளிக்கை வரியை ரத்து செய்யுமாறு குரல் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று இயக்குநர் சேரன் கூறியுள்ளார்.

ரஜினி சார்... ஜிஎஸ்டி, கேளிக்கை வரிவிதிப்புக்கு எதிரா நீங்க குரல் கொடுங்க... உங்கள் குரலுக்கு தனி மதிப்பு உள்ளது என்று சேரன் ட்விட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார். இதே போல பல பிரபலங்களும் ரஜினிக்கு கோரிக்கை விடுத்தனர்.

Director Cheran thanking to Rajinikanth

இந்த நிலையில், இன்று அதிகாலை ட்விட்டரில், "தமிழ் சினிமா துறையை நம்பியுள்ள லட்சகணக்கவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசைக் கேட்டு கொள்கிறேன்,'' என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு பலரும் ரஜினிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர். சிலர், ரஜினி கேளிக்கை வரியை மட்டுமே நீக்கச் சொல்லியிருக்கிறார்... ஏன் ஜிஎஸ்டியை நீக்கச் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

ரஜினியின் வாய்ஸ் குறித்து இயக்குநர் சேரன் கூறுகையில், "கேளிக்கு வரியை நீக்கக் கோரி குரல் கொடுத்த ரஜினி சாருக்கு நன்றி", என்றார்.

English summary
Director Cheran has conveyed his Thanks to Rajinikanth for his voice against Entertainment tax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil