twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புகைமூட்டங்கள், இரைச்சல் இல்லாத சென்னை.. குழந்தைகளுக்கு இதைப் பழக்குங்க.. இயக்குனர் சேரன் அட்வைஸ்!

    By
    |

    சென்னை: வீட்டில் இருக்கும் நண்பர்கள், குழந்தைகளுக்கு இந்த விஷயத்தைப் பழக்குங்கள் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Covid-19 Chennai's Public Opinion | குடிமகன்களுக்கு கொரானாவே பரவாயில்லை

    பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிகொடிகட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப் உட்பட பல ஹிட் படங்களை இயக்கியவர் சேரன்.

    ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். கடைசியாக ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்திருந்தார்.

    கொரோனா

    கொரோனா

    இந்நிலையில், கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    படப்பிடிப்பு ரத்து

    படப்பிடிப்பு ரத்து

    இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் முக்கியமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவு

    இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

    கைதட்டல்

    கைதட்டல்

    அதை ஏற்று ஏராளமானோர் பிரதமர் அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தனர். இதனால் நேற்று இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல், இருந்தனர். கொரோனாவுக்கு எதிராக அர்ப்பணிப்புடன் செயல்படும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு கைதட்டி பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார். அதன்படி ஏராளமான பொதுமக்களுடன் பிரபலங்களும் கைதட்டினர்.

    குழந்தைகளை பழக்குங்கள்

    குழந்தைகளை பழக்குங்கள்

    இந்நிலையில் இயக்குனர் சேரன், பறவைகளுக்கு இரை வைக்க குழந்தைகளை பழக்குங்கள் என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், 'வாகன புகைமூட்டங்களும் இரைச்சலும் இல்லாததால் சென்னை நகரத்தில் நிறைய பறவைகள் பறப்பதை காண முடிகிறது... அனைத்தும் இரைதேடி மொட்டை மாடிகளில் அமர்கிறது.. எப்போதும் 20 புறாக்கள் வரும் இடத்தில் இன்று 50க்கும் மேல்... வீட்டில் இருக்கும் நண்பர்கள், பறவைகளுக்கு இரை வைக்க குழந்தைகளை பழக்குங்கள்' என்று கூறியுள்ளார்.

    English summary
    Director cheran tweet about feeding the birds
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X