அடுத்து இயக்க போவது ரஜினியா? விஜய்யா?...டான் டைரக்டர் சொன்ன செம தகவல்
சென்னை : டைரக்டர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமானார். முதல் படமே பிளாக் பஸ்டர் படமாக அமைந்து, 110 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது.
முதல் படத்திலேயே 100 கோடி வசூல் பார்த்த அறிமுக டைரக்டர்களில் சிபி சக்கரவர்த்தியும் ஒருவர். டான் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்து யாரை வைத்து அவர் படம் இயக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி அடுத்ததாக ரஜினியை இயக்க போவதாகவும், இதற்காக கதை தயார் செய்து வருவதாகவும் சமீபத்தில் தகவல் பரவியது. அதே சமயம், விஜய்யை தான் அவர் இயக்க போகிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றி சிபி சக்கரவர்த்தியே ஓப்பனாக பேசி உள்ளார்.சமீபத்தில் மீடியா ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், நான் அடுத்த படத்திற்கு கதை தயார் செய்து வருவது உண்மை தான். ஆனால் யார் நடிக்க போகிறார்கள் என்பதை இதுவரை நான் முடிவு செய்யவில்லை.
தற்போது கதை உருவாக்கத்திலேயே முழு கவனம் செலுத்தி வருகிறேன். இந்த கதைக்கான ஹீரோ யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யவில்லை என்றார். ஆனால் தன்னுடைய கதை எதை அடிப்படையாக கொண்டது என அவர் எந்த தகவலையும் சொல்லவில்லை. இதனால் ரசிகர்கள் இது யாருக்கான கதையாக இருக்கும், எந்த மாதிரியான கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
முதல் படமான டான் படம் கல்லூரியை பின்புலமாக கொண்ட படமாகும். கல்லூரியில் மாணவர்கள் பண்ணும் சேட்டையை காமெடி கலந்து சொல்லி இருந்தார். காதல், அப்பா- மகன் சென்டிமென்ட், கல்லூரி வாழ்க்கை என அனைத்தும் கலந்து இந்த படத்தை கலந்து கொடுத்திருந்தார். இதனால் இவரின் அடுத்த படம் எதை பற்றியதாக இருக்கும் என ரசிகர்கள் மனதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் ரஜினி தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் படத்திலும், டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் விஜய்யும் நடித்து வருகின்றனர். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











