Don't Miss!
- News
இதெல்லாம் பூலோகத்தில் உண்டா? ரெடியாகாத வேட்பாளர்.. எடப்பாடி திணறுகிறாராமே? இவர் இப்படி சொல்லுறாரே?
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Sports
இதை செய்தால் போதும்.. உலக கோப்பையை இந்தியா வெல்லும்.. முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை
- Finance
எல்ஐசி, எஸ்பிஐ, மியூச்சுவல் பண்ட்களுக்கும் பிரச்சனையா.. முதலீடு என்னவாகும்.. அதானியால் கஷ்டகாலம்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கு ஆன செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல.. ரொம்ப கம்மி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
இதுக்கு பேர் பெற்றோர் செய்யும் வன்கொடுமை.. ஷிவானி அம்மா செய்த செயலை கண்டித்த பிரபல இயக்குநர்!
சென்னை: நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் அம்மா அகிலா ஆடிய ருத்ர தாண்டவம் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
Recommended Video

ஷிவானி அம்மா நாசுக்காக கண்டிக்காமல், ரொம்பவே சத்தம் போட்டும், தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியும் ஷிவானியை பப்ளிக்காக கண்டித்தது வன்கொடுமைக்கு சமமானது என இயக்குநர் சி.எஸ். அமுதன் போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.
ஷிவானிக்கு பதிலாக ஷிவானி அம்மாவை பிக் பாஸ் போட்டியாளர் ஆக்குங்க என்றும் ஒரு பக்கம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அசத்துறாரே
ஆரி..
அடுத்த
பட
ஃபர்ஸ்ட்
லுக்கும்
ரிலீஸ்..
பிக்
பாஸ்
பிரபலம்
தான்
ஹீரோயினே!

அதிர வைத்த அகிலா
இந்த சீசன் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி ரொம்பவே சுமாராக போவதாகவும், சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி, அர்ச்சனா, அனிதா ஆகியோர் வெளியேறியதும் வீடே ஏதோ மயான அமைதியாக ஆன மாதிரி இருந்தது. இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் ஷிவானி அம்மா அகிலாவின் என்ட்ரி பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சமூக வலைதளத்தையே அதிர வைத்துள்ளது.

ஒரே நாளில் ஸ்டார்
ஷிவானி நாராயணன் சீரியல்களில் நடித்து, இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக தினமும் போட்டோ போட்டு, பிக் பாஸ் வீட்டில் பாலாவை சுற்றி சுற்றி வந்து இத்தனை நாட்களாக சேமித்த ஸ்டார் ரேட்டிங்கை, ஷிவானி அம்மா, ஷிவானியை கண்டபடி திட்டி தனது மனக் குமுறல்களை கொட்டித் தீர்த்து ஒரே நாளில் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் ஸ்டாராகி விட்டார்.

இயக்குநர் கண்டனம்
தமிழ்ப்படம், தமிழ்ப்படம் 2 படங்களை இயக்கிய இயக்குநர் சி.எஸ். அமுதன், எதேச்சையாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நேரிட்டது. ஷிவானியின் அம்மா செய்தது சரியான செயல் அல்ல, வயதுக்கு வந்த ஒரு பெண்ணை இப்படி பப்ளிக்காக திட்டுவது தவறு என்று தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

பெற்றோர் செய்யும் வன்கொடுமை
ஷிவானி நாராயணன் ஒன்றும் சாதாரண பெண் அல்ல, தனக்கு பிடித்ததை செய்யக் கூடிய தைரியமான ஒரு பெண் தான். அதிலும் சீரியல்களில் ஏகப்பட்ட நடிகர்களுடன் நடித்து பழகுவதை போலத்தான் பிக் பாஸ் வீட்டிலும் பழகி வருகிறார். இப்படி இத்தனை கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் ஷிவானியை டோட்டல் டேமேஜ் செய்வது பெற்றோர் செய்யும் வன்கொடுமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவும் எதிர்ப்பும்
ஷிவானி நாராயணன் அம்மா செய்தது முழுவதுமே ஸ்க்ரிப்ட் தான். அதற்காக யாரும் பொங்க வேண்டாம் என்றும், சரியாக சொன்னீங்க, ஷிவானி அம்மா பிக் பாஸ் வீட்டிற்குள் செய்தது முற்றிலும் தவறு கண்டிக்க வேண்டிய ஒன்றுதான். தப்பே செய்திருந்தாலும், வீட்டிற்கு வந்த பிறகு தனியாகத்தான் கண்டிக்க வேண்டுமே தவிர, இப்படி பொதுவெளியில் திட்டி பேசுவது குற்றமாகும் என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.