Don't Miss!
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Sports
மொத்த ப்ளானையும் மாத்துங்க.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. தினேஷ் கார்த்திக் முக்கிய அறிவுரை!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதல்வரான ஸ்டாலின்.. ஜோசியமெல்லாம் ஃபிராடுன்னு இப்போ அதிகாரப்பூர்வமாயிடுச்சு.. பிரபல இயக்குநர்!
சென்னை: தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து ஜோசியம் குறித்து பிரபல இயக்குநர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. திமுக கூட்டணி 150க்கும் மேற்பட்ட இடங்களிலும் திமுக தனித்து 130க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற்றது.
தனது பிறந்தநாளை பெண் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாடினார் ஆனந்த்ராஜ்
இதனை தொடர்ந்து தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பதவியேற்றார். ஸ்டாலின் தலைமையில் திமுக அமைச்சர்களும் பதவியேற்றனர்.

புதிய அரசுக்கு வாழ்த்து
அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக பதவியேற்றுள்ள தமிழக அரசுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஜோசியம் ஃபிராடு
இந்நிலையில் பிரபல இயக்குநரான சிஎஸ் அமுதன் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார். அதாவது ஜோசியம் ஃபிராடு என்பது தற்போது அதிகாரப்பூர்வமாகிவிட்டது என தெரிவித்துள்ளார்.

ஜாதகத்தில் அமைப்பில்லை
ஸ்டாலினுக்கு முதல்வராகும் அமைப்பு அவரது ஜாதகத்தில் இல்லை என அதிமுக அமைச்சர்களே பலமுறை கூறியுள்ளனர். இதேபோல் பாஜகவினரும் ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் ராசியில்லை.

ஜாதகத்தை பொய்யாக்கிய ஸ்டாலின்
ஆகையால் தமிழக முதல்வராக முடியாது என தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஸ்டாலின் தற்போது முதல்வராகி, ஜாதகத்தை பொய்யாக்கியுள்ளார். இதனை பார்த்த இயக்குநர் சிஎஸ் அமுதன் இப்படி ஒரு டிவிட்டை பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் சிஎஸ் அமுதன்
திமுக தேர்தல் விளம்பரங்கள் உட்பட பிரச்சாரத்திற்கான அனைத்து பணிகளையும் இயக்குநர் சிஎஸ் அமுதன் தான் செய்து தந்தார். இதற்காக திமுக வேட்பாளராக வெற்றி பெற்ற பிடிஆர் தியாகராஜன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கேலி செய்து படம்
இயக்குநர் சிஎஸ் அமுதன், மிர்ச்சி சிவாவை வைத்து தமிழ் படம் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இது பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து வெளியான இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.