Don't Miss!
- News
திடீரென உதயநிதி கான்வாய்க்குள் புகுந்த வண்டி.. டக்கென சுதாரித்த ஓட்டுநர்..பெரும் விபத்து தவிர்ப்பு!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தன்யாவை 2வது திருமணம் செய்தது உண்மை..அவதூறாக பேசிய நடிகை மீது வழக்கு தொடுத்த இயக்குநர் பாலாஜி மோகன்!
சென்னை : நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் பிறந்து வளர்ந்த தன்யா,ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஸ்ருதி ஹாசனின் தோழியாக நடித்திருந்தார்.
அதன் பின் அட்லி இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்திலும், நயன்தாராவின் தோழியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் படவாய்ப்பு இல்லாததால், டோலிவுட்டிற்கு சென்ற தன்யா, தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என அனைத்து மொழிப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
பீஸ்ட் வீரராகவனை கூப்பிடுங்க.. தூங்குற குழந்தையை அடித்து எழுப்பும் பாலகிருஷ்ணா.. ரசிகர்கள் விளாசல்!

ரகசிய திருமணம்
அண்மையில் தெலுங்கு நடிகை கல்பிகா, யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நடிகை தன்யா, திரைப்பட இயக்குநர் பாலாஜி மோகனை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு, யாருக்கும் தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், அந்த இயக்குநர் தன்யாவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட அனுப்புவது இல்லை என கூறியிருந்தார்.

சர்ச்சையை கிளப்பிய நடிகை
நடிகை கல்பிகா கூறிய கருத்து சோஷியல் மீடியாவில் பெரும் புயலை கிளப்பியது. இதையடுத்து, யயூடியூப் டிரெண்டான இந்த வீடியோ திடீரென நீக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த கல்பிகா, தன்யாவை தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டதாக குற்றம் சாட்டி இருந்தார்.

நடிகை மீது அவதூறு வழக்கு
இந்நிலையில், இயக்குநரும் தயாரிப்பாளருமான பாலாஜி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், நடிகை தன்யா பாலகிருஷ்ணாவை கடந்த ஜனவரி 23ம் தேதி திருமணம் செய்து கொண்டேன் என்றும், நாங்கள் ரகசியமாக குடும்பம் நடத்துவதாக நடிகை கல்பிகா கணேஷ் யூடியூப்பில் அவதூறான கருத்துக்களை பரப்பி வருகிறார்.

தடைவிதித்த நீதிமன்றம்
எங்களின் திருமணம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு பேசி வரும் நடிகை கல்பிகாவுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி, அவதூறாக கருத்து தெரிவித்த கல்பிகா கணேஷுக்கு நீதிபதி தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து, ஜனவரி 20ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

பாலாஜி மோகன்
இயக்குநர் பாலாஜி மோகன் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர். மேலும், வாயை மூடி பேசவும், மாரி, மாரி 2 போன்ற படங்களை இயக்கி உள்ளார். யோகி பாபு நடித்து தேசிய விருது பெற்ற மண்டேலா படத்தை தயாரித்து தயாரிப்பாளராக மாறினார். இயக்குநர் பாலாஜி மோகன் 2012ம் ஆண்டு அருணா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டர். பின்னர் இருவருக்கு இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.