twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உடல்நலக் குறைவு.. சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் ஈரோடு சவுந்தர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!

    By
    |

    சென்னை: பிரபல நடிகரும் இயக்குனருமான ஈரோடு சவுந்தர் உடல்நலக்குறைவால் காலமானார்.

    இந்த கொரோனா காலகட்டத்தில் சினிமாதுறையை சேர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருகின்றனர்.

    இது சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு சவுந்தர்

    ஈரோடு சவுந்தர்

    தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட சினிமாவில் முக்கியமான கலைஞர்கள் இந்த கொரோனா காலகட்டத்தில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிரபல வசனகர்த்தாவும் நடிகரும் இயக்குனருமான ஈரோடு சவுந்தரும் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.

    நாட்டாமை வசனகர்த்தா

    நாட்டாமை வசனகர்த்தா

    இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய பல படங்களுக்கு வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். சேரன் பாண்டியன். நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் உட்பட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அவர் வசனம் எழுதிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

    ரஜினியின் லிங்கா

    ரஜினியின் லிங்கா

    நெப்போலியன் நடித்த முதல் சீதனம், சரத்குமார் நடித்த சிம்மராசி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ரஜினியுடன் லிங்கா, கமலுடன் தசாவதாரம் படங்களிலும் ஈரோடு சவுந்தர் நடித்துள்ளார். சித்தி உட்பட பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

    உள்ளேன் அய்யா

    உள்ளேன் அய்யா

    கடந்த ஆண்டு தனது பேரன் கபிலேஷை நாயகனாகவும் தனது தம்பி மகன் பாலசபரீஸ்வரனை வில்லனாகவும் அறிமுகப்படுத்தி, உள்ளேன் அய்யா என்ற படத்தை இயக்கினார் ஈரோடு சவுந்தர். இந்தப் படம் பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, அவர்களது எதிர்கால குறிக்கோள் குறித்த எண்ணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

    சிறுநீரக பிரச்னை

    சிறுநீரக பிரச்னை

    இந்நிலையில், சிறுநீரக பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 8 வருடமாக டயாலிஸ் செய்துவந்தார். இந்நிலையில் டயாலிசிஸ் செய்வதற்காக நேற்று சென்ற அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    பள்ளிபாளையம்

    பள்ளிபாளையம்

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 63. அவர் மறைவிற்கு திரையுலகினர் பலர் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த ஈரோடு சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவி, கலையரசி, காயத்ரி என்று மகள்கள் உள்ளனர்.
    அவர இறுதிச்சடங்கு பள்ளிபாளையத்தில் நாளை நடக்கிறது.

    English summary
    Director/dialogue writer/ actor Erode sounder has passed away today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X