Just In
- 4 hrs ago
உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.. ரொம்ப நன்றி சார் கமலை சந்தித்த ரியோ.. டிவிட்டரில் உருக்கம்
- 5 hrs ago
என்னாது.. சுந்தர் .சியும் அங்கே வரப் போறாரா.. செம பரபரப்பு.. தலைவர்களுடன் தடாலடி சந்திப்பு!
- 6 hrs ago
அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை பார்த்தவன் – இயக்குநர் சுரேஷ் சண்முகம் பேட்டி!
- 8 hrs ago
கோடைக்காலம் தொடங்கிடுச்சுல்ல..பிகினியில் இன்ஸ்டாகிராமை அலறவிடும் வாரிசு நடிகை.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- News
பிரதமரின் மோடியின் தாயாருக்கு எதிராக... தரக்குறைவான கருத்து... ட்விட்டரில் டிரெண்டாகும் #BoycottBBC
- Automobiles
ஒரே ஆண்டில் க்ரெட்டாவின் விற்பனையில் இவ்வளவு பெரிய மாற்றமா!! ஹூண்டாயின் விற்பனை 26% அதிகரிப்பு!!
- Finance
1 பில்லியன் டாலர் ஐபிஓ.. மாபெரும் திட்டத்துடன் களமிறங்கும் சோமேட்டோ..!
- Sports
இந்த விஷயங்களை செய்தால் போதும்... பல்வேறு சாதனைகளை படைக்கலாம்.நாளை கோலிக்கு காத்திருக்கும் வாய்ப்பு
- Lifestyle
மகா சிவராத்திரி அன்னைக்கு நீங்க நினைச்சது நடக்க இந்த விஷயங்கள மட்டும் செய்யுங்க...!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் NTPC நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பில் கட்டாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்ட இயக்குநர்!
சென்னை: பில் தொகையைச் செலுத்தாமல் படக்குழுவினரை மும்பை ஓட்டலில் திண்டாட விட்டுள்ளார் தமிழ் சினிமா இயக்குநர் ஒருவர்.
அவர் பெயர் பி ரவிக்குமார். சமீபத்தில் நடிகை சுஜிபாலா விவகாரத்தில் ஏகத்துக்கும் அடிபட்டவர் இந்த ரவிக்குமார். இவரால் தனக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சுஜிபாலா புகார் தந்தது நினைவிருக்கலாம்.

இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ரவிக்குமார் சிக்கியுள்ளார். தன் சொந்தத் தயாரிப்பான 'லவ் பண்ணலாமா வேணாமா' படப்பிடிப்பிற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவை மும்பை அழைத்துச் சென்ற ரவிக்குமார், அவர்களை ஓட்டலிலேயே திண்டாட விட்டுவிட்டு பாதியில் திரும்பி வந்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மும்பை ஹோட்டல் நிர்வாகத்தினர் ரவிக்குமார் தங்களுக்கு பெருந்தொகை பாக்கி வைத்திருப்பதாகக் கூறி, உடனே அந்தத் தொகையைச் செலுத்தக் கோரினார்.
ஆனால் இதற்கு பதில் எதுவும் அளிக்காத ரவிக்குமார், மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு வெளியேறிவிட்டாராம்.
இந்த விஷயம் தெரிய வந்ததும் ஷாக் ஆகிவிட்டார்களாம் படக்குழுவினர். தொடர்ந்து படக்குழுவினருக்கு எந்த சேவையும் தர முடியாது என கூறிவிட்டது ஓட்டல் நிர்வாகம்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு இவர்களுக்கு உணவு கூட தரப்படவில்லை. தங்க மட்டுமே அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது, "படப்பிடிப்புக் குழுவினர் மும்பை ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். தேர்தல் சமயம் என்பதால் தன்னால் ஹோட்டல் பாக்கியை செலுத்த முடியவில்லை," என்று தெரிவித்தார்.
இப்போது கிடைத்துள்ள தகவல்படி, ஓட்டல் பாக்கியைச் செலுத்த ரவிக்குமார் ஒப்புக் கொண்டுள்ளாராம். எனவே படக்குழுவினருக்கு சேவைகளைத் தொடர்கிறது ஓட்டல் நிர்வாகம்.