»   »  விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்!

விக்ரம் நடிக்கும் பிரமாண்ட படத்தின் ஸ்க்ரிப்ட்டோடு 'மலை'யேறிய இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சாமி 2 (விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - திரிஷா) #SAAMY2 first look

திருவனந்தபுரம் : 'எண்ணு நின்டே மொய்தீன்' படத்தின் இயக்குநர் ஆர்.எஸ்.விமல் அடுத்து விக்ரமை வைத்து 'மஹாவீர் கர்ணா' படத்தை இயக்குவதற்குத் தயாராகிவிட்டார். சமீபத்தில், 'மஹாவீர் கர்ணா' படத்தின் ஸ்கிரிப்ட்டோடு சபரிமலைக்குச் சென்ற டைரக்டர் விமல் ஐயப்பனிடம் ஆசீர்வாதம் பெற்றுத் திரும்பியிருக்கிறார்.

இயக்குநர் விமல், 'மஹாவீர் கர்ணா' படத்தின் திரைக்கதையைத் தயாரிக்க கடுமையாக உழைத்திருக்கிறாராம். எட்டு முறை ஸ்கிரிப்ட் எழுதி இப்போதுதான் பெர்ஃபெக்டாக முடித்து திருப்தி அடைந்திருக்கிறாராம்.

Director goes to sabarimala with mahavir karna script

'மஹாவீர் கர்ணா' படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருக்கிறது. இதற்காக செட் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. பாகுபலியை விட பிரமாண்டம் காட்டவேண்டும் என்பது தான் டைரக்டரின் ஐடியாவாம்.

இப்படத்தின் காட்சிகளை, ஜெய்ப்பூர், கனடா பகுதிகளிலும் ஷூட் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம். தமிழ், மலையாளம், இந்தியில் தயாராகும் இந்தப் படத்தை 32 மொழிகளில் டப் செய்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் டைரக்டர் விமல்.

இந்தப் படத்தில் முதலில் பிருத்விராஜ் நடிக்கவிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை சேர்ந்த படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ 300 கோடி பட்ஜெட்டில் இப்படத்தைத் தயாரிக்கிறது. ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் இப்படத்தில் பணிபுரிய இருக்கிறார்கள்.

English summary
R.S.Vimal, director of 'Ennu Ninte Moideen', is ready to direct 'Mahavir Karna' with actor Vikram. Recently, director Vimal went to Sabarimala with the script. The shooting of the film will begin in October.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X