»   »  கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்!

கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கார் விபத்தில் நூலிழையில் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்!- வீடியோ

சென்னை: செம்மஞ்சேரி அருகே கவுதம் மேனனின் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில் அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் கவுதம் மேனன்.

Director Goutham menon escaped in a car accident

இவர் மாமல்லபுரத்தில் இருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார். செம்மஞ்தசேரி அருகே வந்தபோது அவரது கார் டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இயக்குநர் கவுதம் மேனன் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இந்த விபத்து குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குநர் கவுதம் மேனனின் கார் விபத்துக்குள்ளானது திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Director Goutham menon escaped in a car accident. Goutham menon Luxury car met with an accident in Chennai semmancherry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil