சிம்புவை வைத்து கேஜிஎஃப் ஆ?...வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் கெளதம் மேனன்

சென்னை : டைரக்டர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நான்காவது முறையாக நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீசாக உள்ளது.

Recommended Video

Thiruchitrambalam | STR, Dhanush படத்தை பார்க்காதே-னு சொன்னாரா? | Cool Suresh *Kollywood

இந்த படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் கெளதம் மேனன். ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ் மான் இசையமைத்துள்ளார்.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா சரத்குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து புதிய லுக்கிற்கு மாறி நடித்துள்ளார்.

வெந்து தணிந்தது காடு ஆடியோ விழா

வெந்து தணிந்தது காடு ஆடியோ விழா

வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் செப்டம்பர் 2 ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தொடர்பான போட்டோக்களை படக்குழுவே சமீபத்தில் வெளியிட்டது.

கமலும் வர போகிறாரா?

கமலும் வர போகிறாரா?

ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான க்ளிம்ப்ஸ் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

டைரக்டர் தந்த சர்ப்ரைஸ் அப்டேட்

டைரக்டர் தந்த சர்ப்ரைஸ் அப்டேட்

இந்நிலையில், இப்படம் குறித்த சர்ப்ரைஸ் அப்டேட்டை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக சமீபத்திய பேட்டியில் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், முதல் பாகம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான ஷூட்டிங் தற்போது லக்னோவில் நடைபெற்று வருவதாக அவர் கூறி உள்ளார்.

இது தான் படத்தின் கதையா?

இது தான் படத்தின் கதையா?

முதல் பாகத்தில் சிம்பு சாதாரண இளைஞனாக இருந்து எப்படி கேங்ஸ்டர் ஆனார் என்பதை காட்ட உள்ளதாகவும், இரண்டாம் பாகத்தில் அவரின் கேங்ஸ்டர் வாழ்க்கை குறித்து காட்ட உள்ளதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். பத்து தல படத்திலும் சிம்பு கேங்ஸ்டராக நடித்து வருவதால் அதே லுக்கில் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்புவை வைத்து கேஜிஎஃப் ஆ?

சிம்புவை வைத்து கேஜிஎஃப் ஆ?

இந்த படத்திற்காக 19 வயது முத்து வீரனாக சிம்பு மாறி உள்ளார். அவர் மிகவும் கவனமான, சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட். முதல் பாகம் எமோஷனலான பயணமாக இருக்கும். இரண்டாம் பாகத்தில் அவர் வன்முறையை தவிர்க்க நினைப்பார். ஆனால் அவரால் முடியாது. அப்படி கதை, கேரக்டரில் தான் சிம்பு நடிக்கிறார் என தெரிவித்துள்ளார். இதை கேட்ட பலரும், இவர் செல்வதை பார்த்தால் சிம்புவை வைத்து கேஜிஎஃப் படம் எடுத்திருப்பார் போல என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X