அஜித்தை பின்பற்றும் ஹெச்.வினோத்...இப்படியே போனால் வலிமை வலுவிழந்துவிடும்!

சென்னை : அஜித் பாணியிலேயே தற்போது டைரக்டர் ஹெச்.வினோத்தும் சினிமா விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறாராம். வலிமை படத்தில் இதையே அவர் கடைபிடிப்பதால் படத்தின் நிலை என்ன ஆகும் என ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Valimai FDFS Review | Ajith | Huma Qureshi | H Vinod | Yessa Bussa | Filmibeat Tamil

அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்திற்கு பிறகு, இரண்டாவது முறையாக அஜித் படத்தை இயக்கி உள்ளார் ஹெச்.வினோத். தற்போது மூன்றாவதாக அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தையும் இவர் தான் இயக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று ஆண்டு கால போராட்டம், காத்திருப்பிற்கு பிறகு வலிமை படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

வலிமை ப்ரொமோஷன் நிகழ்ச்சி

வலிமை ப்ரொமோஷன் நிகழ்ச்சி

வலிமை படத்தின் ரிலீசிற்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையிலேயே ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு துவங்கி உள்ளது. பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து வலிமை ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வலிமை படத்தின் புரமோஷனுக்காக போனிகபூர் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார். இவற்றில் போனி கபூர் கலந்து கொள்ளாவிட்டாலும் டைரக்டரான ஹொச்.வினோத்தை அனுப்பி வைத்து வருகிறார்.

 அடம்பிடிக்கும் ஹெச். வினோத்

அடம்பிடிக்கும் ஹெச். வினோத்

அவ்வாறு கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட ஹெச் வினோத் வர தயக்கம் காட்டி உள்ளார். அதன்பிறகு தயாரிப்பாளர் போனி கபூர் வற்புறுத்தியதால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பெங்களூரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வினோத், ரத்ன சுருக்கமாக ஒரு வரி மட்டுமே கன்னடத்தில் பேச விட்டு, மின்னல் வேகத்தில் மேடை ஏறி, இறங்கி வந்து விட்டார். அதை வேறு வழியில்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி சமாளித்தார்.

வலிமை வலுவிழந்து விடுமே

வலிமை வலுவிழந்து விடுமே

பெங்களூரு நிகழ்ச்சியிலாவது மேடைக்கு போய் ஒரு வரி பேசினார் என்றால் ஐதராபாத் நிகழ்ச்சியில் சுத்தமாக மேடைக்கே வரவில்லை. பலமுறை வற்புறுத்தியும் மேடைக்கு வர மறுத்து, கீழே சோஃபாவில் அமர்ந்தபடி இரண்டு வார்த்தைகள் பேசி முடித்து விட்டார். வலிமை படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் படத்தின் புரமோஷனுக்கு கலந்து கொள்ள தயக்கம் காட்டுவது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இப்படி முக்கியமானவர்களே படத்தை தாங்கி பிடிக்கவில்லை என்றால் வலிமை படம் வலுவிழந்துவிடும் என பலரும் கூறி வருகிறார்கள்.

அஜித் பாணியில் டைரக்டர் வினோத்

அஜித் பாணியில் டைரக்டர் வினோத்

அஜித் பொதுவாகவே எந்த சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக தமிழ் சினிமாவில் கூறப்பட்டு வருகிறது. அதுவும் அவர் நடிக்கும் படங்களின் விழாக்களுக்கு கூட அவர் வருவதில்லை. இதனாலேயே அஜித் படங்களுக்கு பெரிய அளவில் ப்ரொமோஷனோ, ஆடியோ வெளியீடு போன்ற விழாக்களோ நடத்தப்படுவதில்லை. ஆனால் அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படம் இன்று கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த படத்தை பற்றி நல்ல விமர்சனங்களே வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அஜித்தை போல் வினோத்துடன் ப்ரொமோஷனுக்கு போக மாட்டேன் என பிடிவாதம் செய்து வருவது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X