Don't Miss!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு..துணிவு..இரண்டுமே நல்லா ஓடணும்...எச்.வினோத்தின் சுவாரசிய பேட்டி!
சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளது.
துணிவு படத்தின் டிரைலரைப் பார்த்து வியந்து போன அஜித் ரசிகர்கள் இந்த பொங்கலை தல பொங்கலாக கொண்டாட காத்திருக்கிறார்கள்.
இப்படத்தில் மலையாள நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன், ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், யோகி பாபு, வீரா,பிரேம் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களின் கதாபாத்திர பெயர்களையும் படக்குழு கடந்த வாரம் வெளியிட்டது.
அஜித்தை
பின்பற்றும்
ஹெச்.வினோத்...இப்படியே
போனால்
வலிமை
வலுவிழந்துவிடும்!

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்
துணிவு படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. படத்தை தியேட்டரில் பார்க்க அஜித் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ஆர்வலர்களும் காத்திருக்கிறார்கள். துணிவு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என இயக்குநர் ஹெச். வினோத் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அலப்பறை கொடுத்த ரசிகர்கள்
தொடர்ந்து பேசிய எச் வினோத், போனி கபூரின் அப்பா ஒரு தயாரிப்பாளர், அவரின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சினிமா தான் ஆனால், அவர் அஜித்தை வைத்து படம் எடுத்த பிறகு தான், அஜித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் போனி கபூரை மிகப்பெரிய அளவில் டிரெண்டாக்கிவிட்டார்கள். இதை போனி கபூர் உண்மையில் ரசித்து பல முறை என்னிடம் கூறியிருக்கிறார்.

அடிக்கடி அப்டேட் கேட்டா எப்படி?
ஒரு படத்திற்கு அப்டேட் கொடுக்க வேண்டும் என்றால் ஃபர்ஸ்ட் லுக், பாடல், டீசர், டிரைலர், மோஷன் போஸ்டர் இவை தான் அப்டேட் என்று சொல்லுவார்கள். ஆனால், படத்தின் ஷூட்டிங் தொடங்கியதுமே அப்டேட் கொடுத்துக்கொண்டே இருந்தால், அனைத்து அப்டேட்டும் வெளியாகிவிடும், பிறகு படம் வெளியாகும் போது என்ன அப்டேட் கொடுக்க முடியும். இதுதான் வலிமை படத்திற்கு நடந்தது, ரசிகர் அப்டேட் கேட்டு கொஞ்சம் கொஞ்சமா பல காட்சிகளை அப்டேட்டாக கொடுத்துவிட்டோம், கடைசியில் தியேட்டரில் கொஞ்சம் காட்சியைத் தான் பார்க்க முடிந்தது. இதனால், படத்தின் முக்கியமான விஷயங்களை ரசிகர்கள் கேட்காமல் இருப்பது நல்லது.

இரண்டு படமும் நல்லா ஓடணும்
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவும் ஒரே நாளில் வெளியாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த எச் வினோத், இரண்டு பெரிய நடிகர்களின் படங்களுக்கு ஒரே நேரத்தில் வெளியாவது இயல்பான ஒன்றுதன். இரண்டு படமும் நல்லா ஓடணும், இரண்டு படங்களும் Win Win சூழலாக அமைய வேண்டும் என்பதே என்னுடைய ஆசை என்றார்.

சவாலானது
மேலும், டாப் ஹீரோவை வைத்து படத்தை இயக்கும் போது, சவாலாகத்தான் இருக்கும், ஏன் என்றால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற பிரஷர் அதிகமாகவே இருக்கும். கதைக்குள் சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும் அது ஓவர் பில்டப்பாக மாறிவிடக் கூடாது என்பதால் கவனமாக கையாள வேண்டும். எங்களுக்கு கொடுக்கப்பட்ட காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறோம்.