ஹலீதா ஷமீமின் ஏலே.. ட்ரைலர் & படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவரும் படங்கள் அரிதாகவே இருந்தது.

ஆனால் சமீப காலமாக இளம் இயக்குனர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களும் ஈடு கொடுத்து தரமான படங்களை இயக்கி வருகின்றனர்.

பூவரசம் பீப்பீ

பூவரசம் பீப்பீ

அவர்களில் ஒரு முக்கியமான இயக்குனர் ஹலீதா ஷமீம். பூவரசம் பீப்பீ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். ரிலீஸ் ஆன போது பெரிதும் பேசப்படாமல் போனாலும் பின்னர் பலரும் பாராட்டிய படைப்பு

பலரின் பாராட்டு

பலரின் பாராட்டு

அதை தொடர்ந்து சில்லு கருப்பட்டி படத்தை இயக்கினார் ஹலீதா. இந்த படம் ரிலீஸ் ஆன போதே நல்ல வரவேற்பை பெற்றது. மனதை வருடும் அழகான கதையாக சில்லு கருப்பட்டி அமைந்து, ரசிகர்களின் பாராட்டையும் அள்ளியது.

முதல் தயாரிப்பு

முதல் தயாரிப்பு

பிரபல இயக்குனர்களான புஷ்கர் - காயத்ரி 'வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ்' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல்
தயாரிப்பாக ஏலே திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

இன்று ட்ரைலர்

இன்று ட்ரைலர்

ஹலீதா இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. இந்த படமானது பிப்ரவரி 12ம் தேதி திரையரங்கில் வெளிவரவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Read more about: halitha shameem
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X