Just In
- 7 min ago
இசையமைப்பாளர் மற்றும் நடிகரான சித்தார்த் விபின் திடீர் திருமணம்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 24 min ago
ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் செம க்யூட்டா போஸ்.. வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 1 hr ago
விஜய் சேதுபதியிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற குட்டி பவானி..
- 1 hr ago
அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்! #Ayalaan
Don't Miss!
- News
100 நாட்களுக்குள் குறைகளுக்கு தீர்வு... உங்கள் மனுக்களுக்கு நான் பொறுப்பு.. ஸ்டாலின் அளித்த உறுதி..!
- Sports
நிலாவுலதான் மிதந்துக்கிட்டு இருக்கேன்... இந்தியாவோட வெற்றி அந்தளவுக்கு சந்தோஷம் கொடுத்துருக்கு!
- Automobiles
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
- Finance
வாரத்தின் முதல் நாளே தடுமாறும் இந்திய சந்தைகள்.. என்ன காரணம்..!
- Lifestyle
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க காலை வேளையில் செய்வதற்கு ஏற்ற எளிமையான 5 உடற்பயிற்சிகள்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அருண் விஜய் படத்தில் 'அருவா' இல்லாத எமோஷனல் ஆக்ஷன்.. வேற ஸ்டைலில் டைரக்டர் ஹரி!
சென்னை: அருண் விஜய் நடிக்கும் படத்தில் எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று இயக்குனர் ஹரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஹரி, கடைசியாக விக்ரம் நடித்த சாமி ஸ்கொயர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.
கையை அப்படி வச்சு, இங்க ஒரு லுக்.. இது என்ன ஸ்டைலு? வைரலாகும் நடிகையின் ஒர்க் அவுட் போட்டோ!
இதையடுத்து அவர் சூர்யா நடிக்கும் 'அருவா' படத்தை இயக்குவதாக இருந்தது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வந்தன.

கருத்து வேறுபாடு
படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பதாக இருந்தது. படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் ஹரி- நடிகர் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டது.

தயாரிப்பாளர்
இதையடுத்து அருண் விஜய் நடிக்கும் படத்தை ஹரி இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அதிகாரபூர்வமாக அதுபற்றி தகவல் வெளிவரவில்லை. அதோடு இந்த படம் அதிக பட்ஜெட்டை கொண்டது என்பதால் தயாரிப்பாளர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம்
இந்நிலையில், ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிப்பதாக அறிவித்தது. அருண் விஜய் நடிப்பில் அதிகப் பொருட்செலவில் தயாராகும் படமாக இது இருக்கும் எனவும் கூறியிருந்தது. ஷூட்டிங் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி, ஆகஸ்ட்டில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அருவா கதையல்ல
இதற்கிடையே இது சூர்யாவுக்காக உருவாக்கப்பட்ட அருவா படத்தின் கதை என்றும் அதில்தான் அருண் விஜய் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை ஹரி தரப்பு மறுத்துள்ளது. 'அது பெரிய ஹீரோவுக்கான கதை. இந்தப் படம் அதுவல்ல என்றும் இது அருண் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதை' என்றும் தெரிவித்துள்ளனர்.

எமோஷனல் காட்சி
மேலும், இது ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதை இல்லை. எமோஷனல் அதிகமாக கொண்ட குடும்ப கதை என்றும் கதையில் இடம்பெறும் காமெடி காட்சி போல, ஆக்ஷன் காட்சியும் இடம் பெற்றிருக்கும் என்றும் அதிக ஆக்ஷன் இருக்காது எனவும் கூறப்படுகிறது.

தெலுங்கு மார்க்கெட்
இதன் ஷூட்டிங் காரைக்குடியில் தொடங்கி, நாகர்கோயில், தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளில் நடக்க இருக்கிறது. இந்தப் படம் தெலுங்கிலும் உருவாக இருக்கிறது. இதன் மூலம் அருண் விஜய்க்கு தெலுங்கிலும் பெரிய மார்க்கெட்டை உருவாக்க இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளார்.