»   »  சபாஷ் ஹரி... நீங்க 'அருவா இயக்குநர்' அல்ல... அறிவார்ந்த இயக்குநர்!

சபாஷ் ஹரி... நீங்க 'அருவா இயக்குநர்' அல்ல... அறிவார்ந்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்றைய அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் ஒரு முக்கிய செய்தி பெரிய அளவில் வெளியாகியிருக்கிறது. எத்தனைப் பேர் கவனித்திருப்பார்கள் தெரியவில்லை.

"வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளையும், அசுத்தமான பொருட்களையும் இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்குகின்றனர். இதன் காரணமாக மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும்கூட, விதிகளும், நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்," என்பதுதான் வழக்கு.

Director Hari expose a sensational issue in Si3

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர் காட்டமாகக் கேட்ட கேள்வி:

"மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை பற்றி கவலைப்படாமல், பணம் கிடைக்கிறது என்பதற்காக வெளிநாடுகளின் அபாயகரமான கழிவுகளை இந்தியாவில் கொண்டு வந்து கொட்டுவதற்கு அனுமதிப்பதா?

இந்த பிரச்சினை முக்கியமான பிரச்சினை. நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். எனவே விதிகளை அதிகாரிகள் புறந்தள்ளி விட முடியாது. இந்த வழக்கை நாங்கள் விட்டு விட முடியாது. இது மிகவும் முக்கியமானது. நீங்கள் ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்."

இதுவரையில் இந்த மாதிரியான புகார்களை கற்பனை என்றுதான் மக்கள் நினைத்திருந்தனர். இதன் ஆபத்துகளை அதிகம் அவர்கள் உணரவில்லை.

முதல் முறையாக அதை திரையில் சினிமாவாகக் காட்டியவர் ஹரி. அந்தப் படம்தான் சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் சி3 எனும் சிங்கம் 3.

ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவந்து மருத்துவக் கழிவுகள், மின்னணு கழிவுகளை இந்தியாவில் கொட்டப்படுகிறது. இதற்கு பெரும் பணம் கைமாறுகிறது. காலாவதியான மாத்திரைகளை இந்தியாவில் கிராமப் பகுதிகளில் விற்கின்றனர் என்பதை மையமாக வைத்துதான் சி3 உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை, அதை எடுத்த ஹரியை ஹரியை அருவா இயக்குநர் என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும், மக்கள் ரசிக்கின்றனர். மக்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, நாட்டின் நலத்துக்கே கேடு விளைவிக்கும் ஒரு ஆபத்தான விஷயத்தை அரசே அனுமதிக்கும் அவலத்தை வெகுஜன ஊடகமான சினிமாவில் அம்பலப்படுத்தியுள்ள ஹரி, அருவா இயக்குநரா... அறிவார்ந்த இயக்குநர்தானே!

English summary
Director Hari has exposed how India is dumping of hazardous wastes of foreign countries in his Si 3.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil