Don't Miss!
- Lifestyle
ஒன்றரை இலட்சம் ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்து பெண்... அப்படி அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
- News
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த.. ராட்சச கரடி உருவம்.. அந்த வாயை பாருங்க.. அதிர்ந்த நாசா.. பரபர போட்டோ
- Automobiles
நம்பவே முடியல... படத்தில் உள்ள இந்த பைக்கிற்கு இப்படியொரு வரலாறு உள்ளதா!! முழு விபரம்...
- Sports
தோனியின் இடத்தை நான் நிரப்புவேன் - இசான் கிஷன் தடாலடி.. 50 கூட அடிக்கலனா முடியாதுப்பா?
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
காட்பாதர் படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய விஜய்.. விஜய்யுடன் கூட்டணி குறித்து பேசிய மோகன்ராஜா!
சென்னை : மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சிறப்பான வெற்றியை பெற்ற படம் லூசிபர். இந்தப் படத்தை பிரபல மலையாள நடிகர் பிரத்விராஜ் இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் ரீமேக்காக தற்போது தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ளது காட்பாதர்.
இந்தப் படத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் படம் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது.
லூசிபர் தெலுங்கு ரீமேக்.. தனி ஒருவன் இயக்குனர் இயக்குகிறார்!

ரசிகர்களை கவர்ந்த லூசிபர் படம்
நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியானது லூசிபர். இந்தப படத்தை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கியிருந்தார். அரசியல் களத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

சிரஞ்சீவியின் காட்பாதர் படம்
இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்திருந்தார் பிரபல இயக்குநர் ஜெயம் ராஜா. படத்தில் சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷாயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது காட்பாதர்.

4 நாட்களில் ரூ.100 கோடி வசூல்
இந்தப் படம் ரிலீசான 4 நாட்களிலேயே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. ஆந்திரா, தெலங்கானாவில் இந்தப் படத்திற்கு அதிகமான வரவேற்பு இருந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் தெலுங்கு பதிப்பு தமிழகத்திலும் வெளியாகியுள்ளது. விரைவில் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான ரீமேக்
தெலுங்கு ரசிகர்களை கவரும்வகையில் இந்தப் படத்தை மிகவும் நேர்த்தியாக ரீமேக் செய்துள்ளதாக படத்தின் இயக்குநர் மோகன்ராஜாவிற்கு தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. படத்தின் வெற்றிக்கு சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான்கான் பங்களிப்பும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

விஜய் பாராட்டு
இதனிடையே இந்தப் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் தன்னை பாராட்டியதாக இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். அவருடன் தான் தொடர்ந்து நல்ல நட்பை பாராட்டி வருவதாகவும், தான் கொரோனா காலகட்டத்தில் 5 ஸ்கிரிப்ட்களை எழுதியுள்ளதாகவும் அதில் ஒன்று விஜய்க்கானது என்றும் ஜெயம் ராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

விரைவில் விஜய்யுடன் கூட்டணி
அந்த வகையில் இதுகுறித்து தான் விஜய்யுடன் பேசியுள்ளதாகவும் விஜய்யுடன் தான் விரைவில் இணைந்து படத்தை இயக்கவுள்ளதாகவும் ஜெயம் ராஜா மேலும் கூறியுள்ளார். இதனிடையே தன்னுடைய தம்பியை வைத்து தனியொருவன் 2 படத்தையும் அவர் இயக்கவுள்ளதாக முன்னதாக ஜெயம்ரவி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.