For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிகரம் தொட்ட இயக்குனருக்கு சிலை திறந்து மரியாதை செலுத்திய திரை பிரபலங்கள்

|

நவம்பர் 8 இன்று காலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்க்கு சிலை நிறுவப்பட்டது .தமிழ் சினிமாவின் மிக முக்கிய மற்றும் மிக பெரிய இயக்குநரான பாலசந்தர் அவர்களுக்கு பல நாட்களாக சிலை வைக்க முயற்சி மேற்கொண்டு இருந்த நிலையில் தற்போது அவருக்கு சிலை வைத்து திறப்பு விழாவையும் நடத்தி இருக்கிறார்கள்.

இயக்குனர் பாலசந்தர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக கருத கூடிய ரஜினியையும் கமலையும் ஹீரோ ஆக்கியவர் . . அவர்களின் குரு என்றே பாலசந்தரை சொல்லலாம் .பல படங்கள், நாடகங்கள், தயாரிப்பு என பல சாதனைகளை செய்த பாலசந்தர் 23டிசம்பர் 2014 அன்று காலமானார்.

Director K. Balachandar statue opening ceremony by celebraties

தற்போது பாலசந்தர்க்கு ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கமல் அலுவலகத்தில் சிலை நிறுவபட்டுள்ளது. நேற்று கமல் பிறந்தநாள் என்பதால் கமல் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று விட்டார் . இந்நிலையில் கமல் தற்போது சென்னை வந்து காலையில் திறப்பு விழாவை நடத்தினார் இதில் சூப்பர் ஸ்டார் மற்றும் கமலின் நண்பரான ரஜினிகாந்த், நாசர், கவிஞர் வைரமுத்து , பிரமிட் நடராஜன், கே.எஸ். ரவிக்குமார், மணிரத்தினம் , தயாரிப்பாளர் ஐசரி கணேசன் மற்றும் பல திரை பிரமுகர்கள் இந்த திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளனர் . அதை தொடர்ந்து பலரும் ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்துக்கு பாலசந்தர் சிலையை காண வந்த வண்ணம் உள்ளனர்.

பாலசந்தர் தமிழ் சினிமாவின் இயக்குனர் சிகரம் என்று அழைக்கபட்டவர் . ஏனெனில் இவர் தமிழ் சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியே ஏற்படுத்தியுள்ளார். பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியது மட்டுமின்றி பலரும் நடிப்பை கற்றுக்கொள்ள ஒரு பள்ளியை வழங்கியவர் இயக்குனர் சிகரம்.

அரைத்த மாவையே அரைத்த காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி மடை திறந்த வெள்ளம் போல பல வித்யாசமான உணர்ச்சிகரமான திரைப்படங்களை வழங்கியவர் இயக்குனர் பாலசந்தர். கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

ஒரு தடவை இல்லை 40 தடவை ஹேராம் பார்த்த சூப்பர்ஸ்டார்!

இவரின் கலை தாகத்தை பாராட்டி இந்திய அரசு கலைமாமணி,பத்மஶ்ரீ, நாகேஷ்வர ராவ் தேசிய விருது என பல விருதுகளை வழங்கியுள்ளது. இவருக்கு மிகவும் உயரிய விருதான தாதா பால்கே சாஹேப் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Director K. Balachandar statue opening ceremony by celebraties

இவரின் நீர்குமிழி முதல் பார்த்தாலே பரவசம் வரை எல்லாமே பல மக்களால் ரசிக்கபட்ட படங்கள். இவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். கடைசியாக தனது சீடனான கமலின் உத்தம வில்லன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் சினிமாவில் மட்டும் தன் பயணத்தை முடித்து கொள்ளவில்லை. பல நாடகங்களை இயக்கியும் , தயாரித்தும் இருக்கிறார் . இவர் ரகு வம்சம் ,ரயில் ஸ்நேகம் ,சாந்தி நிலையம் போன்ற சில நாடகங்களை இயக்கியும் மர்ம தேசம் போன்ற நாடகங்களை தயாரித்தும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவிற்கு ஒரு இந்திய முகம் கொடுத்த புரட்சி இயக்குனர் கே. பாலசந்தர் அவர்களுக்கு அன்பின் அடையாளமாக மார்பளவு வெண்கலச்சிலை ஒன்றினை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தில் நிறுவப்பட்டு இன்று காலை அதன் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Director K. Balachandar statue opening ceremony by celebraties

60 ஆண்டுகாலமாக திரையுலகில் அதே துள்ளலுடனும், தன்னம்பிக்கையுடனும் , இளமையோடும் பணியாற்றிய இயக்குனர் சிகரம் பாலசந்தர் அவர்களை தமிழ் சினிமா என்றும் மறவாது.

English summary
Director K. Balachander is an extrordinary director who has given a different face to tamil cinema. He has introduced several people into cinema industry and they have become star celebraties in this cinema. Today his statue is being opened in Alwarpet at Kamalhassan office. Many celebraties have joined this function.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more