»   »  சத்திரியன், பிரம்மா, ஏழையின் சிரிப்பில் படம் இயக்கிய சுபாஷ் மரணம்!

சத்திரியன், பிரம்மா, ஏழையின் சிரிப்பில் படம் இயக்கிய சுபாஷ் மரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல இயக்குநர் கே சுபாஷ் இன்று சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.

கே சுபாஷ் தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர். பழம் பெரும் இயக்குநர் ஆர் கிருஷ்ணனின் மகன் (இரட்டையர் கிருஷ்ணன் - பஞ்சு).

Director K Subash passes away

1988-ல் கலியுகம் படம் மூலம் இயக்குநராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். தொடர்ந்து உத்தம புருஷன், சத்திரியன், பிரம்மா, நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில், சபாஷ் என பல வெற்றிப் படங்களைத் தந்தார்.

குறிப்பாக சத்திரியன், பிரம்மா போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றவை.

தமிழில் மட்டுமல்லாது, இந்தியிலும் வெற்றிகரமான கதாசிரியராகத் திகழ்ந்தார்.

ஷாரூக்கான் - ரோஹித் ஷெட்டி கூட்டணியின் முக்கிய தூணாகத் திகழ்ந்தவர் சுபாஷ். சூப்பர் ஹிட் படங்களான சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே, அக்ஷய் குமார் நடித்த எண்டர்டெயின்மென்ட், ஹவுஸ்ஃபுல் 3 மற்றும் அஜய் தேவ்கன் நடித்த சண்டே போன்ற படங்களின் கதாசிரியர் சுபாஷ்தான்.

உடல் நலக் குறைவு காரணமாக சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த சுபாஷ் இன்று மரணமடைந்தார்.

இவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்குகிறது.

முகவரி: கோலவிழியம்மன் கோவில் தெரு, ஹபிபுல்லா தெரு, தி நகர் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்)

தொடர்புக்கு: 7358428234 / 9940599839

English summary
Popular Tamil film director K Subash was died at SRM hospital today due to ill health.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil