»   »  மீரா ஜாஸ்மினின் ஷூட்டிங் அட்டகாசங்கள் ஒன்றா ரெண்டா - மனந்திறந்த மலையாள இயக்குநர்

மீரா ஜாஸ்மினின் ஷூட்டிங் அட்டகாசங்கள் ஒன்றா ரெண்டா - மனந்திறந்த மலையாள இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த அட்டகாசங்களை விரிவாக விளக்கியிருக்கிறார் பழம்பெரும் மலையாள இயக்குநர் கமல்.

4 படங்களில் மீரா ஜாஸ்மினுடன் இணைந்து பணிபுரிந்தேன் எல்லாப் படங்களிலும் எனக்கும் மீரா ஜாஸ்மினுக்கும் இடையே மனக்கசப்பே நிலவியது என்று பிரபல செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார் கமல்.

மேலும் முன்னணி நடிகர்களையும் காக்க வைத்து பெருமை அடைந்திருக்கிறார் மீரா ஜாஸ்மின்.

மீரா ஜாஸ்மின்

மீரா ஜாஸ்மின்

ரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மின் மலையாளத் திரையுலகில் நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயர் வாங்கியவர். மேலும் தனது நடிப்புக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார் மீரா ஜாஸ்மின். இவரைப் பற்றி சமீபத்தில் மலையாளத்தின் பழம்பெரும் இயக்குநர் கமல் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

முட்டல் மோதல்

முட்டல் மோதல்

மீரா ஜாஸ்மினுடன் நான் 4 படங்களில் இணைந்து பணி புரிந்திருக்கிறேன். இந்தப் படங்களின் எந்தப் படப்பிடிப்பிலும் நான் மீரா ஜாஸ்மினுடன் மனநிறைவாக பணியாற்றியதில்லை. நான் அவரின் தவறுகளைத் திருத்த பலமுறை முயன்றிருக்கிறேன், ஆனால் அவர் என்னுடைய எந்த அறிவுரையையும் கேட்க தயாராக இல்லை.

கிராமபோன்

கிராமபோன்

நான் இயக்கிய கிராமபோன் படப்பிடிப்பின் போது 3 முறை தேசிய விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் எஸ்.பி.சதீசுடன் சண்டை போட்டிருக்கிறார். இந்த சண்டையின் போது அவர் தேர்வு செய்த ஆடை ஒன்றையும் மீரா கிழித்துப் போட்டார்.

மோகன்லால்

மோகன்லால்

சத்யன் அந்திக்காடு படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மீரா ஜாஸ்மின் காத்திருக்க வைத்து மிகவும் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்து சேர்ந்தார். இந்தக் காத்திருப்பில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் அடக்கம்.

மின்னமின்னிக் கூட்டம்

மின்னமின்னிக் கூட்டம்

நான் இயக்கிய மின்னமின்னிக் கூட்டம் படப்பிடிப்பின்போது அவர் சகோதரருடன் சண்டையிட்டு படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்தார். இந்த விஷயம் எனது மொத்த படத்திலும் எதிரொலித்தது, இனிமேல் மீரா ஜாஸ்மினுடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்ற முடிவுக்கு நான் வரக் காரணமாக அமைந்தது இந்தப் படத்தில் எழுந்த பிரச்சினைகள் தான்" என்று தனது வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் கமல்.

English summary
In a recent interview, director Kamal has revealed about his experience of working with Actress Meera Jasmine. The Movies Shooting time Meera Had a clash with Technicians, co-actors, Assistants and always she is coming late only".Meera Jasmine had acted in Gramaphone, Swapnakoodu, Perumazhakkalam and Minnaminnikoottam directed by Kamal.
Please Wait while comments are loading...