19 ஆண்டுகளுக்கு பின்...கதிருடன் கை கோர்க்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை : காதலை மையமாக வைத்து பல இடங்களை இயக்கி வெற்றி கண்டவர் டைரக்டர் கதிர். காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் என பல பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்து உள்ளார்.

அப்பாஸ், ஹீரா, குணால், ரம்பா, ரிச்சர்ட், ஸ்ரீதேவி விஜயக்குமார் உள்ளிட்ட பல நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் டைரக்டர் கதிர் தான். பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படம் இயக்க வந்துள்ளார் கதிர்.

மீண்டும் கோலிவுட்டில் டைரக்டர் கதிர்

மீண்டும் கோலிவுட்டில் டைரக்டர் கதிர்

மனதை உருக வைக்கும் பல காதல் படங்களை தந்த கதிர், காதல் வைரஸ் படத்திற்கு பிறகு எந்த படமும் இயக்கவில்லை. இந்த படம் 2002 ம் ஆண்டு ரிலீசானது. அதற்கு பிறகு படம் எதையும் இயக்கும் முயற்சியில் இறங்காமல் இருந்த டைரக்டர் கதிர், தற்போது புதுமுக இயக்குனரை போல் களமிறங்க போகிறாராம்.

எதிர்பார்ப்பை கிளப்பிய படம்

எதிர்பார்ப்பை கிளப்பிய படம்

புது முகங்களின் கூட்டணியுடன் மீண்டும் கதிர் இயக்க போகும் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க போகிறாராம். இதனால் கோலிவுட்டில் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரேக்கிற்கு இது தான் காரணமா

பிரேக்கிற்கு இது தான் காரணமா

கோலிவுட்டில் நீண்ட காலம் பிரேக் விட்டது பற்றி டைரக்டர் கதிரிடம் கேட்ட போது, 2016 ல் கன்னட படம் இயக்கினேன். சர்வதேச படங்கள் இரண்டிலும் பணியாற்றினேன். அந்த சமயங்களில் தமிழ் படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் பிஸியாக இருந்ததால் தான் அவற்றை ஏற்கவில்லை.

தயாரிப்பாளர்ண மகன் தான் ஹீரோ

தயாரிப்பாளர்ண மகன் தான் ஹீரோ

இப்போது தான் சரியான நேரம் அமைந்துள்ளது. இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர் ரங்கநாதன். அவர் தனது மகன் கிஷோரை ஹீரோவாக அறிமுகப்படுத்த நினைத்துள்ளார். அதனால் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

மற்றொரு புதுமுகம்

மற்றொரு புதுமுகம்

இப்போது வரை நிறைய நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தி உள்ளேன். இந்த முறை தயாரிப்பாளரின் மகனையும் மக்கள் ஏற்கும் படி அறிமுகப்படுத்த முடியும் என நம்புகிறேன். இவ்வாறு டைரக்டர் கதிர் கூறினார்.

இதுவும் காதல் கதை தான்

இதுவும் காதல் கதை தான்

படத்தின் கதை பற்றி கேட்டதற்கு, வழக்கமாக எனது மற்ற படங்களைப் போல் இதுவும் காதல் கதை தான். இது மியூசிக்கல் லவ் ஸ்டோரியாக இருக்கும். ஆமாம் இந்ட படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க போகிறார். விரைவில் கம்போசிங் வேலைகள் துவங்கப்பட உள்ளது.

19 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி

19 ஆண்டுகளுக்கு பின் கூட்டணி

மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவை தேர்வு செய்யும் பணியில் இறங்கி உள்ளேன். விரைவில் முறைப்படி படத்தின் வேலைகள் துவங்கப்படும் என்றார். கதிர் இயக்கிய படங்கள் அனைத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த வெற்றி கூட்டணி நிச்சயம் மற்றொரு வெற்றி படத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X