twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமர்ஷியல் படங்களின் முன்னோடி... சிறப்பான இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் பிறந்தநாள்

    |

    சென்னை : கமர்ஷியல் படங்களின் முன்னோடியாக விளங்கி வருபவர் இயக்குர் கே.எஸ் ரவிக்குமார்.

    நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வெற்றிக் கண்டு வருகிறார் ரவிக்குமார்.

    டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்த திரிஷ்யம் 2.. மாஸ் காட்டிய மோகன் லால்!டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம்.. மீண்டும் டிரெண்டிங்கில் வந்த திரிஷ்யம் 2.. மாஸ் காட்டிய மோகன் லால்!

    இன்றைய தினம் தனது 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    புதுவசந்தம் படம்

    புதுவசந்தம் படம்

    புதுவசந்தம் படத்தில் டைரக்டர் விக்ரமனுக்கு உதவி இயக்குநராக தன்னுடைய திரைப்பயணத்தை துவக்கினார் கேஎஸ் ரவிக்குமார். இதையடுத்து அவர்மீது தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியின் பார்வை விழ, புரியாத புதிர் என்ற படத்தை இயக்கினார். கன்னட படத்தின் ரீமேக்காக இருந்தாலும் இந்த படத்தின்மூலம் சிறப்பான கவனம் பெற்றார்.

    முக்கியமான படம் நாட்டாமை

    முக்கியமான படம் நாட்டாமை

    அடுத்ததாக சரத்குமார் நடிப்பில் இவர் இயக்கிய சேரன் பாண்டியன் படமும் ஹிட்டடிக்க கமர்ஷியல் ஹிட் டைரக்டரானார் ரவிக்குமார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை கொடுத்த இவருக்கு முக்கிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது நாட்டாமை. இந்த படம் 200 நாட்கள் தியேட்டர்களில் ஓடி சாதனை படைத்தது.

    ஜப்பானில் சூப்பர் ஹிட்

    ஜப்பானில் சூப்பர் ஹிட்

    தொடர்ந்து இவர் இயக்கத்தில் ரஜினி -மீனா நடித்த முத்து படம் மிக சிறப்பான வெற்றி படமாக அமைந்தது. இதுவரை ரஜினியின் கேரியரில் மிகச்சிறந்த படமாக முத்து உள்ளது. முதல்முறையாக ஜப்பானிய மொழியிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதிகமான வசூலை குவித்த இந்திய படம் என்ற பெருமையும் முத்துவிற்கு கிடைத்தது.

    ஹிட்டடித்த தில்லானா பாடல்

    ஹிட்டடித்த தில்லானா பாடல்

    இந்த படத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். குறிப்பாக தில்லானா தில்லானா பாடல் எவர்கிரீன் பாடலாக உள்ளது. தொடர்ந்து இவர் இயக்கத்தில் ரஜினி நடித்த படையப்பாவும் அவரது கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது.

    கமலின் வித்தியாச கெட்டப்

    கமலின் வித்தியாச கெட்டப்

    அடுத்ததாக கமல் நடிப்பில் ரவிக்குமார் இயக்கிய அவ்வை சண்முகி படமும் சூப்பர்ஹிட். கமலை இந்த படத்தில் முழுமையாக பெண் கேரக்டரில் நடிக்க வைத்து வியப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து தெனாலி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என கமல் நடிப்பில் தொடர் ஹிட்டை கொடுத்தார்.

    காமெடியிலும் கலக்கல்

    காமெடியிலும் கலக்கல்

    தான் கமர்ஷியலில் மட்டுமின்றி காமெடி படங்களை எடுப்பதிலும சளைத்தவன் இல்லை என்பதை கார்த்திக் நடிப்பில் வெளியான பிஸ்தா படத்தின் மூலம் நிரூபித்தார் ரவிக்குமார். இவர் ரஜினி நடிப்பில் இறுதியாக டைரக்ட் செய்த லிங்கா படம் தோல்வியடைந்தது. இதையடுத்து டைரக்ஷனை விட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

    குவியும் வாழ்த்துக்கள்

    குவியும் வாழ்த்துக்கள்

    தொடர்ந்து தன்னுடைய கேரக்டர் மற்றும் காமெடி நடிப்பினால் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 63வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Commercial hit director KS Ravikumar's 63rd birthday... wishes pours in twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X