twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உருவாகிறதா படையப்பா 2..? நீலாம்பரி யாரு..? பக்கா பிளானில் ரஜினியை சந்திக்கும் கே.எஸ். ரவிக்குமார்!

    |

    சென்னை : ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய மைல்கல்லாக அமைந்த திரைப்படம் படையப்பா.

    1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

    இந்த நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் மிக விரைவிலேயே படையப்பா 2 படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்காக ரஜினியை சந்திக்க பக்கா பிளானில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

    தமிழாற்றுப்படையை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு அதிகமாகிடுச்சு- பாராட்டிய ரஜினி தமிழாற்றுப்படையை படித்த பின் வைரமுத்து மீதான மதிப்பு அதிகமாகிடுச்சு- பாராட்டிய ரஜினி

    படையப்பா

    படையப்பா

    தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவையும் கடந்து ஜப்பான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஜப்பானில் தமிழ்நாட்டில் உள்ளது போலவே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் கமர்சியல் கிங்காக இருக்கும் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மெகா ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் முத்து வெற்றியை தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணி இணைந்த திரைப்படம் படையப்பா.

    நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன்

    நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன்

    1999 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் திரைத்துறை வரலாற்றிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு அப்பாவாக நடித்திருப்பார். சௌந்தர்யா இதில் கதாநாயகியாக நடித்து இருக்க ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார். இன்றும் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு இணையாக எந்த ஒரு வில்லி கதாபாத்திரம் சித்தரிக்கப்படவில்லை என்பதே உண்மை.

     படம் முழுக்க கூஸ்பம்ஸ் காட்சிகள்

    படம் முழுக்க கூஸ்பம்ஸ் காட்சிகள்

    தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக படையப்பா படத்திற்கு மட்டும்தான் 210 பிரிண்டுகள் மற்றும் 70 கேசட்டுகள் வெளியிடப்பட்டது என்பது வரலாறு. சொந்த முறை பையனாக இருந்தாலும் படையப்பாவை தன்னுடைய பணம், புகழ், ஆசையால் அடைய முடியாமல் கடைசிவரையிலும் கன்னியாகவே வாழ்ந்து தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட நீலாம்பரியின் நிறைவேறாத ஆசை, சித்தப்பாவின் துரோகத்தால் சொத்துக்களை இழந்த படையப்பா என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனைத்து காட்சிகளிலும் கூஸ்பம்ஸ் நிறைந்திருக்கும்.

     மீண்டும் கைகூடவில்லை

    மீண்டும் கைகூடவில்லை

    இன்றும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மைல்கல்லாக உள்ள படையப்பா படத்திற்கு பிறகு ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் மீண்டும் இணைந்த லிங்கா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா மற்றும் சுல்தான் உள்ளிட்ட படங்களில் ரஜினிகாந்த் நடிக்க இருந்தார் ஆனால் அவை அனைத்தும் கைகூடவில்லை.

     படையப்பா 2

    படையப்பா 2

    இந்த நிலையில் கேஎஸ் ரவிக்குமார் இப்பொழுது படையப்பா 2 இயக்க தயாராகி முழு ஸ்கிரிப்டையும் ரெடி செய்து வருவதாகவும் அதற்காக கடந்த ஆண்டு நடிகை ரம்யாகிருஷ்ணனை சந்தித்ததாகவும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. இந்த நிலையில் விரைவிலேயே ரஜினியை சந்தித்து படையப்பா 2 கதை குறித்து பேசியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஜினிகாந்த் இப்பொழுது நெல்சன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அதைத் தொடர்ந்து படையப்பா 2 மூலம் மீண்டும் ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி உருவாகுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    English summary
    Director KS Ravikumar meeting Actor Rajinikanth for Padaiyappa Part -2 Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X