twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெட்டுக்கிளி படையெடுப்பை காப்பானில் காட்டி தீர்க்கதரிசியான கேவி ஆனந்த்.. நின்று பேசும் படைப்புகள்!

    |

    சென்னை: இயக்குநர் கேவி ஆனந்தின் மரணம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் இயக்கத்தில் வெளியான படங்கள் குறித்து ஓர் பார்வை..

    ஒளிப்பதிவாளராக சினிமாவில் என்ட்ரியான கேவி ஆனந்த், முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றார். பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள கேவி ஆனந்த் சிறந்த இயக்குநராகவும் வலம் வந்தார்.

    சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகிறாரா பிரபல இயக்குனர்!? சிம்பு படத்தில் நடிகராக அறிமுகமாகிறாரா பிரபல இயக்குனர்!?

    மொத்தம் 7 படங்களை இயக்கியுள்ளார் கேவி ஆனந்த். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம்.

    கனா கண்டேன்

    கனா கண்டேன்

    7 படங்கள் தான் என்றாலும் அனைத்துமே பல ஆண்டுகள் நின்று பேசும் படங்களாக அமைந்தது. ஒளிப்பதிவாளராக வெற்றிக்கண்ட கேவி ஆனந்த் 2005ஆம் ஆண்டு வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஸ்ரீகாந்த் பிரித்திவிராஜ், கோபிகா ஆகியோரை வைத்து த்ரில்லர் ரொமான்டிக் படமாக இந்த படத்தை இயக்கினார் கேவி ஆனந்த். முதல் படமே நல்ல விமர்சனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது.

    அயன் திரைப்படம்

    அயன் திரைப்படம்

    அதனை தொடர்ந்து 2009ஆம் ஆண்டு சூர்யா, தமன்னா, பிரபு உள்ளிட்டோரின் நடிப்பில் அயன் படத்தை இயக்கினார் கேவி ஆனந்த். இதன் மூலம் நடிகர் சூர்யாவை வேறொரு பரிமாணத்தில் காட்டினார். எப்படியெல்லாம் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை சுவாரசியமாக காட்டி வியக்க வைத்தார் கேவி ஆனந்த். இந்த படம் பெரும் வெற்றி பெற்று வசூலை குவித்தது.

    கோ திரைப்படம்..

    கோ திரைப்படம்..

    அடுத்தப்படியாக ஜீவா, கார்த்திகா நாயர், அஜ்மல், பியா பாஜ்பீ ஆகியோரை வைத்து கோ படத்தை இயக்கினார். அரசியல் ஆக்ஷன் படமாக அமைந்தது இப்படம். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் பல்வேறு விருதுகளை குவித்தது.

    மாற்றான் திரைப்படம்

    மாற்றான் திரைப்படம்

    தொடர்ந்து மாற்றான் படத்தின் மூலம் நடிகர் சூர்யாவுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்தார் கேவி ஆனந்த். சைன்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ஆக்ஷன் படமாக உருவான இப்படம், விளையாட்டுத்துறையில் வளர்ந்த நாடுகளின் வீரர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டி மிரட்டியிருப்பார் கேவி ஆனந்த்.

    அனேகன் படம்..

    அனேகன் படம்..

    தனது ஐந்தாவது படமாக அனேகன் படத்தை இயக்கினார். தனுஷ் அமைரா தஸ்தூர் நடிப்பில் வெளியான இப்படம் ரொமான்டிக் த்ரில்லர் படமாக அமைந்தது. கார்ப்ரேட் நிறுவனங்கள் தங்களின் சுய நலத்துக்காக இளைய சமுதாயத்தை எப்படி பயன்படுத்துகிறது என்பதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார் கேவி ஆனந்த்.

    கவண் திரைப்படம்..

    கவண் திரைப்படம்..

    அடுத்ததாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் சேதுபதியை வைத்து கவண் படத்தை இயக்கினார் கேவி ஆனந்த். இந்தப் படமும் அரசியல் பேசும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இருந்தது. தொலைக்காட்சி சேனல்கள் எப்படி சாமானிய மக்களை வைத்து வியாபாரம் பார்க்கிறது என்பதை காட்டியிருப்பார்.

    வெட்டுக்கிளி படையெடுப்பு

    வெட்டுக்கிளி படையெடுப்பு

    காப்பான் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக நடிகர் சூர்யாவுடன் கூட்டணி வைத்தார் இயக்குநர் கேவி ஆனந்த். இந்தப்படத்தின் மூலம் தேசிய அரசியலை பேசிய கேவி ஆனந்த், இந்தியாவில் அரங்கேறிய வெட்டுக்கிளி படையெடுப்பை முன்கூட்டியே காட்டி தீர்க்கத்தரிசியானார் கேவி ஆனந்த். மேலும் வெட்டுக்கிளி படையெடுப்பின் பின்னணியில் உள்ள உலக அரசியலையும் எடுத்துரைத்தார். இதுவே அவரது கடைசி படமானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Director KV Anand movies will speaks for decades. KV Anand Directed 7 movies like Kana Kanden, Ayan, Ko, Mattran, Anegan, Kavan Kaappaan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X