»   »  இயக்குநர் லால் ஜோஸுக்கு ஷெரில் தந்த உற்சாகம்!

இயக்குநர் லால் ஜோஸுக்கு ஷெரில் தந்த உற்சாகம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படம் ரிலீஸானது. இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஸ் இயக்கியிருந்தார்.

மோகன்லாலும் இவரும் பல வருடங்கள் கழித்து இணைந்த படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை லால் ஜோஸ் ஈடுகட்டத் தவறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் அந்தப்படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு கேரளாவையும் தாண்டி மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாடலுக்காகவே ரசிகர் கூட்டம் :

பாடலுக்காகவே ரசிகர் கூட்டம் :

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காகவே ரசிகர்கள் கூட்டம் மீண்டும் தியேட்டருக்கு வருவதும் வருத்தத்தில் இருந்த இயக்குனர் லால் ஜோஸை உற்சாகப்படுத்தியுள்ளதாம். இந்தப்படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல், கடந்த வாரம் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களில் முக்கிய இடம் பிடித்தது.

வைரல் ஹிட் :

வைரல் ஹிட் :

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடி பதிவேற்றிய வீடியோ சமூக வலைதளங்களைத் தெறிக்கவிட்டது. அவர்கள் வெளியிட்ட வீடியோவே பத்து மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோக, பல யூ-ட்யூப் சேனல்களும் இந்த வீடியோவைப் பதிவேற்றியிருந்தன.

ஷெரில் ஆர்மி :

ஷெரில் ஆர்மி :

இந்தப் பாடலில் முன்வரிசையில் நடனம் ஆடிய ஆசிரியை ஷெரில், தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டார். அவருக்கும் நம் தமிழ் ரசிகர்கள் ரசிகர் படையை உருவாக்கிவிட்டனர். ஷெரிலுக்கு சினிமாவில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

படத்தில் இந்தப் பாடல் :

படத்தில் இந்தப் பாடல் :

இந்தப்பாடல் கல்லூரி மாணவர்கள் ஆடிப்பாடி மகிழ்வது போல படமாக்கப்பட்டிருந்தது. மோகன்லால் படத்தில் என்ட்ரி ஆவதற்கு முன்பே இந்தப்பாடல் படத்தில் வந்துவிடும். மோகன்லால் என்ட்ரியை எதிர்பார்த்து படம் பார்க்கும் ரசிகர்களை அப்போது இந்தப்பாடல் பெரிதாக ஈர்க்காவிட்டாலும், படம்விட்டு வெளியே வந்ததும் மனதில் அடிக்கடி நினைத்து முணுமுணுக்கும் பாடலாக அமைந்து விட்டது ஆச்சர்யம்தான்.

English summary
Mohanlal starrer 'Velipadinde Pushtakam' was released as Onam festival special. Jimikki Kammal viral video has given new life to the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil