டிவிட்டரில் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ்… தளபதி 67 அப்டேட்டோட ரெடியா வந்துருக்கார்யா மனுஷன்!

சென்னை: வம்ஷி பைடிபள்ளி இயக்கும் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

வாரிசு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து தளபதி 67 ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் விஜய்.

தளபதி 67 அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நேரத்தில், லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 67 அப்டேட்

தளபதி 67 அப்டேட்

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. சென்னை எண்ணூர் பகுதிகளில் வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், விஜய்யின் தளபதி 67 குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கவுள்ளது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

ரெடியான லோகேஷ்

ரெடியான லோகேஷ்

மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி, தளபதி 67ல் மீண்டும் சம்பவம் செய்ய ரெடியாகிவிட்டனர். இந்தப் படத்தின் திரைக்கதையை பக்காவாக செதுக்கியுள்ளாராம் விஜய். ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்துவிட்ட லோகேஷ், படப்பிடிப்புக்குத் தேவையான லொக்கேஷன்களையும் முடிவு செய்துவிட்டாராம். விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு செட்டுக்கு வந்தால் மட்டும் போதும் என கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கிறார் லோகேஷ்.

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

அப்டேட் கேட்ட ரசிகர்கள்

கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தை மரண ஹிட் கொடுத்த லோகேஷுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிருக்கு. அவர்கள் லோகேஷிடம் தொடர்ந்து தளபதி 67 படம் பற்றி அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தனர். விஜய் ரசிகர்களும் லோகேஷ் செல்லும் இடமெல்லாம் அப்டேட் கேட்டு பின்தொடர்ந்தனர். அதேபோல், டிவிட்டரிலும் லோகேஷை டேக் செய்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். அதனால், சில நாட்களுக்கு டிவிட்டரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் லோகேஷ்.

மீண்டும் என்ட்ரி

மீண்டும் என்ட்ரி

லோகேஷ் டிவிட்டரில் இருந்து வெளியேறியதால் தளபதி 67 அப்டேட்டுக்காக காத்துக்கிடந்த ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆனார்கள். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் திரும்பவும் டிவிட்டரில் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் எப்போது வேண்டுமானாலும் தளபதி 67 அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் திரும்பவும் லோகேஷின் டிவிட்டர் பக்கம் வந்து கேட்டை ஆட்டத் தொடங்கிவிட்டனர். ஏற்கனவே கடந்த சில தினங்களாக தளபதி 67 அப்டேட் பற்றி செய்திகள் வெளிவந்தம் உள்ளன. இந்நிலையில், இப்போது லோகேஷும் டிவிட்டர் பக்கம் திரும்பியது ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X