அருண்விஜய் இரட்டைவேடத்தில் கலக்கிய ‘தடம்‘ … இந்தியில் ரீமேக்காகிறது !

சென்னை : அருண்விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

இதில் அருண் விஜய் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.

அருண்விஜய் ஆக்ஷன் ஹீரோவாக

அருண்விஜய் ஆக்ஷன் ஹீரோவாக

தடையறத் தாக்க படத்திற்குப் பிறகு இயக்குநர் மகிழ் திருமேனியும் நடிகர் அருண் விஜய்யும் இணைந்த திரைப்படம் தடம். இப்படத்தில் முழு ஆக்சன் ஹீரோவாக அருண் விஜய் நடித்திருப்பார். அருண் விஜய்யின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தடையற தாக்க. அந்த மேஜிக் இந்த படத்திலும் வொர்க் அவுட் ஆகி இருக்கும்.

எழில் பொறியாளராக

எழில் பொறியாளராக

எழில், கவின் என இரட்டை கதாபாத்திரத்தில் முதன்முறையாக அருண் விஜய் நடித்திருப்பார். அதில் எழில் என்ற கேரக்டர் ஒரு கட்டுமான பொறியாளர். நல்ல வேலை, நல்ல சம்பளம், அழகான காதல் என எல்லோரும் விரும்பும் வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கவின், திருட்டு வேலை

கவின், திருட்டு வேலை

இரண்டாவது கதாபாத்திரம் கவின் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். அப்படி பல திருட்டுகளை செய்து. அதில், சட்ட ஓட்டைகளை கண்டுபிடிக்கும் அளவிற்கு அதிபுத்திசாலி தனத்தை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கிறார். இப்படி வரும் விறுவிறுப்பான கதையை சொல்லும் திரைப்படம் தான் தடம்.

மகிழ் திருமேனி முத்திரை பதித்தார்

மகிழ் திருமேனி முத்திரை பதித்தார்

தடையறத் தாக்க, மீகாமன் திரைப்படங்களில் பார்த்து ரசித்த மகிழ் திருமேனி ரசிகர்களின் தடம் வெள்ளித்திரையில் ஓடி தடம் பதித்தது. எழுத்தாளராகவும் இயக்குனராகவும் மீண்டுமொருமுறை முத்திரை பதித்திருந்தார் மகிழ் திருமேனி. இப்படத்தில் வித்யா பிரதீப், தன்யா ஹோப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அருண் ராஜ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.

தடம் இந்தி ரீமேக்

தடம் இந்தி ரீமேக்

இந்நிலையில், இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் அருண் விஜய் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வர்தன் கேட்கர் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தடம் தெலுங்கு ரீமேக்

தடம் தெலுங்கு ரீமேக்

தடம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு ரெட் என்ற பெயரில் வெளியானது. இதில், ராம் பொத்தினேனி, நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம், ஜனவரி மாதம் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்றது.

உதயநிதி ஸ்டாலினை வைத்து

உதயநிதி ஸ்டாலினை வைத்து

மகிழ் திருமேனி, உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் நிதி அகர்வால் நாயகியாக நடிக்க உள்ளார். மற்ற நடிகர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் நிதி அகர்வாலின் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X