»   »  ப்ரியதர்ஷன்- உதயநிதி படத்தில் இயக்குநர் மகேந்திரன்!

ப்ரியதர்ஷன்- உதயநிதி படத்தில் இயக்குநர் மகேந்திரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடபடாத படத்தின் படப்பிடிப்பு துரித வேகத்தில் தென்காசி அருகே நடந்து வருகிறது.

மலையாளத்தில் பிரபலமான நமிதா பிரமோத், மற்றும் பார்வதி நாயர் இதில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். தர்பூகா சிவா இசை அமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவில் மூன்லைட் என்டெர்டைன்மெண்ட் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா தயாரிக்கிறார்.

Director Mahendiran in Priyadarshan - Udhayanidhi movie

இந்த படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்ததே. அத்துடன் இந்தப் படத்துக்கு அவரே வசனம் எழுதுகிறார்.

Director Mahendiran in Priyadarshan - Udhayanidhi movie

இப்பொழுது இந்த படத்துக்கு மேலும் பலம் சேர்க்கும் விதத்தில் இயக்குநர் மகேந்திரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 'தெறி' படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், அதற்கு பின்னர் வந்த பல்வேறு வாய்ப்புகளை தவிர்த்து வந்தாராம். ஆனால் இயக்குநர் பிரியதர்ஷன் வடிவமைத்த இந்த கதாப்பாத்திரம் மகேந்திரனை உடனடியாக ஒகே சொல்ல வைத்தது என்கிறார்கள் படக்குழுவினர்.

Director Mahendiran in Priyadarshan - Udhayanidhi movie
English summary
Director Mahendiran is playing a crucial role in Priyadarshan - Udhayanidhi new movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil