twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்.. கமலின் கர்ஜனை குரலில்..பொன்னியின் செல்வன் டிரைலர் எப்படி இருக்கு?

    |

    சென்னை : அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடந்தது.

    இந்த விழவில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நடிகைகள் ஐஷ்வர்யாராய், த்ரிஷா, ஐஷ்வர்யலெட்சுமி என ஏராளமானோர் கலந்து கொண்டார்.

    இந்த விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.பொன்னியின் செல்வன் படத்தில் தமிழ் டிரைலரை கமல்ஹாசன் வெளியிட்டார். பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள டிரைலர் எப்படி இருக்குனு பார்க்கலாமா?

    முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. பொன்னியின் செல்வன் விழாவில் இயக்குநர் ஷங்கர் புகழாரம்! முதல் பான் இந்தியா இயக்குநர் மணிரத்னம் தான்.. பொன்னியின் செல்வன் விழாவில் இயக்குநர் ஷங்கர் புகழாரம்!

    பொன்னியின் செல்வன் டிரைலர்

    பொன்னியின் செல்வன் டிரைலர்

    பறந்து விரிந்த பிரம்மாண்ட மாளிகையுடன் டிரைலர் ஆராவாரத்துடன் தொடங்குகிறது. அதில், கமல்ஹாசனின் கர்ஜனை குரல்லில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்...சோழ நாடு தனது பொற்காலத்தை அடைவதற்கு முன்.. வானில் ஒரு பெரும் வால்மீன் தோன்றியது, சோழ அரச குடும்பத்தில் ஒருவரை அந்த விண்மீன் பலி கொல்லும் என்கிறது ஜோதிடம்.

    ஆற்பரிக்கும் அலை

    ஆற்பரிக்கும் அலை

    ஆற்பரிக்கும் அலைகளுக்கு நடுவே வீரர்களின் அலறல் சத்தம், குதிரையேறி வரும் ஆதித்ய கரிகாலனின் போரை வெல்லும் பசி, சோழநாட்டின் காவலன், சோழ நாட்டு மக்களின் வேலைக்காரன் என கூறி டிரைலரின் அறிமுகமாகும் அருண்மொழிவர்மன், வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்திய கார்த்தி என டிரைலர் விழிகளை விரியவைத்து பிரம்மிப்படைய வைத்துள்ளது.

    3 நிமிடங்கள் 23 வினாடி

    3 நிமிடங்கள் 23 வினாடி

    3 நிமிடங்கள் 23 வினாடிகள் ஓடக் கூடியதாக பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் தவிர மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகரித்து உள்ளது. நேற்று இரவு வெளியான டிரைலர் யூடியூபில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

    செப்டம்பரில் ரிலீஸ்

    செப்டம்பரில் ரிலீஸ்

    கதைகளில் படித்து படித்து மனதிற்குள் ரசித்த கதாபாத்திரத்தை கண்முன் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30ந் தேதி வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் 6 பாடல், இரண்டாம் பாகத்தில் 6 பாடல் என இரண்டு பாகங்களையும் சேர்த்து இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன.

    சோழர் காலத்திற்கு அழைத்து சென்ற ஏஆர் ரகுமான்

    சோழர் காலத்திற்கு அழைத்து சென்ற ஏஆர் ரகுமான்

    படத்திற்காக இசையமைத்திருக்கும் ஏஆர் ரகுமான் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. இதில் எக்காளம், நாயனதாளம், தம்பாட்டம், பம்பை, துடி, கிடுகிட்டி, சுந்தரவளைவு, தப்பு, பஞ்சமுக வாத்தியம், நாதஸ்வரம், வீணை, உடுக்கை, உருமி, கொம்புஆகிய வாத்தியங்கள் இந்த படத்தில் பயன்படுத்தி, படத்தை பார்க்கும் பார்வையாளர்களை 10-ம் நூற்றாண்டு சோழர் காலத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார்.

    English summary
    Director Maniratnam’s Ponniyin Selvan Trailer review : கமலின் கர்ஜனை குரலில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் டிரைலர் எப்படி இருக்கு.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X