»   »  அக்ஷரா ஹாஸன் மீது செம கடுப்பில் இருக்கும் இயக்குனர்: காரணம் வாரிசு நடிகர்?

அக்ஷரா ஹாஸன் மீது செம கடுப்பில் இருக்கும் இயக்குனர்: காரணம் வாரிசு நடிகர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணித்த அக்ஷரா ஹாஸன் மீது இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர் கோபத்தில் உள்ளாராம்.

உலக நாயகன் கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா பிரபல பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷாவின் மகன் விவான் ஷாவுடன் சேர்ந்து நடித்துள்ள இந்தி படம் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா.

இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படப்பிடிப்பு நடந்தபோது எல்லாம் அக்ஷரா ஹாஸன் ஒத்துழைப்பு கொடுத்தார். தற்போது அவருக்கு என்ன ஆச்சு என்றே எனக்கு தெரியவில்லை. விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்கிறார் என்கிறார் இயக்குனர் மனிஷ் ஹரிசங்கர்.

அக்ஷரா

அக்ஷரா

அக்ஷரா ஹாஸனை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. எத்தனை முறை போன் செய்தாலும் எடுத்து பேச மாட்டேன் என்கிறார். அவரது மேனேஜரை கேட்டால் பிற வேலைகளில் அவர் பிசியாக இருப்பதாக கூறுகிறார் என மனிஷ் தெரிவித்துள்ளார்.

ட்ரெய்லர்

ட்ரெய்லர்

படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அதன் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மட்டுமே அக்ஷரா கலந்து கொண்டார். அதன் பிறகு அவரை பார்க்க முடியவில்லை என்கிறார் மனிஷ்.

தனுஜ் விர்வாணி

தனுஜ் விர்வாணி

அக்ஷராவும், விவானும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியதால் அவரது காதலரான தனுஷ் விர்வாணி அவரை பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விடாமல் தடுப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. தனுஜ் விர்வாணி பிரபல நடிகை ரதியின் மகன் ஆவார்.

English summary
Laali Ki Shaadi Mein Laaddoo Deewana director Manish Harishankar is reportedly miffed with Akshara Haasan for not promoting the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil