twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவ்வளவு ஆழமானவரா? மாரி செல்வராஜ்...இன்று பிறந்தநாள்...சுவாரஸ்ய தகவல்கள்

    |

    சென்னை: தமிழ் திரையுலகில் இளம் இயக்குநர்களில் நம்பிக்கைத்தரும் இயக்குநர்களில் ஒருவராக சமூக கதைகளை அடித்தட்டு மக்களின் வலிகளை தெளிவாகச் சொல்லும் படங்களை கொடுத்த மாரி செல்வராஜுக்கு இன்னொரு முகம் உண்டு. அதுகுறித்து சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

    தனுஷை பிரிந்த பிறகு வந்த புதுக்காதல்... நாளைக்கு தெரிஞ்சுடும்.. பூரிப்பில் ஐஸ்வர்யா தனுஷை பிரிந்த பிறகு வந்த புதுக்காதல்... நாளைக்கு தெரிஞ்சுடும்.. பூரிப்பில் ஐஸ்வர்யா

    12 ஆண்டுகள் உதவி இயக்குநராக புடம்போடப்பட்ட மாரி செல்வராஜ்

    12 ஆண்டுகள் உதவி இயக்குநராக புடம்போடப்பட்ட மாரி செல்வராஜ்

    12 வருடம் இயக்குநர் ராமிடம், சிறுகதை எழுத்தாளர், உதவி இயக்குநர் ரஞ்சித் புரடக்‌ஷனில் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியது, தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படம் தற்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோரை வைத்து மாமன்னன் திரைப்படம் என கலைப்பயணத்தை தொடர்கிறார் மாரி செல்வராஜ். இன்று அவரது பிறந்த நாள்.

    பாரதிராஜா பார்த்து வியந்த மாரி செல்வராஜ்

    பாரதிராஜா பார்த்து வியந்த மாரி செல்வராஜ்

    "விமர்சனம், விவாதம் நாம் எதை விமர்சிக்கிறோமா அதைவிட ஒரு படிமேலே போய் சிந்தித்திருந்தால் விமர்சிக்கலாம். நான் விமர்சிக்கிற நிலையில் மாரி செல்வராஜை விட ஒருபடி தாண்டிச் சென்றுள்ளேன் என்று நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்" இது 'பரியேறும் பெருமாள்' படத்தின் விழாவில் மாரி செல்வராஜை பாராட்டி இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியது. தொழில் நுட்பத்தில் சிந்தனையில் ஒருபடி மேலே நிற்கிறார்கள் நான் ஒத்தையடி பாதை போட்டேன் இவர்கள் சாலையே போட்டுவிட்டார்கள்.

    அந்தக்காட்சி ஒன்று போதும் நெகிழ்ந்துப்போன பாரதிராஜா

    அந்தக்காட்சி ஒன்று போதும் நெகிழ்ந்துப்போன பாரதிராஜா

    மாரி செல்வராஜுக்குள் ஒரு சூப்பர் கலைஞன் ஒளிந்திருக்கிறான். கருத்தைச் சொல்லியிருக்கிறான் சரி, ஆனால் சிறிய காட்சிக்குள் சில காட்சிகளை வைப்பது தனித்திறமை. என் பெண் உன் மேல் அவ்வளவு ஆசை வச்சிருக்காளே நீ ஆசைப்படவில்லையா? அவ சொல்லிட்டா நான் சொல்ல முடியாத இடத்தில் இருக்கிறேன் என்று வசனம் வைத்திருப்பார் மாரி செல்வராஜ். கடைசியில் அனைவரும் அமைதியாக கலைந்துச் செல்லும்போது மேஜையில் உள்ள டீ கிளாஸில் ஒரு கட்டங்காப்பி, ஒரு சாதாரண டீ நடுவே பூ வைத்து முடித்திருப்பார். போடா பாரதிராஜா என்பதுபோல் இருந்தது என்று என்று மாரி செல்வராஜை இயக்குநர் பாரதிராஜா பாராட்டி இருப்பார்.

    இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்

    இந்தியில் ரீமேக் ஆகும் பரியேறும் பெருமாள்

    மாரி செல்வராஜை எல்லோரும் வியந்து பார்க்கும் பாரதிராஜா பாராட்டியது மேடைப்புகழ்ச்சியாக தள்ளிவிட முடியாது. ஆழமான சில வார்த்தைகளில் வந்த விமர்சனம் அது. அதற்கு தகுதியானவர் மாரி செல்வராஜ். அதை அடுத்த படமான கர்ணன் படத்திலும் நிருபித்தார். அடித்தட்டு மக்களின் வலிகளை பிறர் சொல்வது ஒருவகை, அதை அனுபவித்தவர் சொல்வது இன்னும் அழுத்தமாக இருக்கும். அதுதான் பரியேறும் பெருமாள், கர்ணன் படக்கதைகள். பரியேறும் பெருமாள் கதை கிட்டத்தட்ட மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொகுப்பு எனலாம். 'பரியேறும் பெருமாள்' படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கரண் ஜோவர் கேட்டுள்ளார்.

    முதலில் எழுத்தாளர் பின் இயக்குநர்

    முதலில் எழுத்தாளர் பின் இயக்குநர்

    ஆர்ம்பத்தில் சிறுகதை எழுத்தாளராக தனது படைப்புகளை கொண்டுவந்தவர் மாரிச் செல்வராஜ். 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்கிற சிறுகதை தொகுப்பு பிரபலம். அடுத்து பிரபல வார இதழில் 'மறக்கவே நினைக்கிறேன்' என்று எழுதிய சிறுகதை தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் இயக்குநர் ராமிடம் 12 ஆண்டுகள் உதவி இயக்குநராக பணியாற்றினார். கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி போன்ற படங்களில் பணியாற்றினார். மாரி செல்வராஜுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. மனைவி பள்ளிக்கூட ஆசிரியராக உள்ளார்.

    கல்லூரியில் ஜாதிய அடக்குமுறையை பேசிய பரியேறும் பெருமாள்

    கல்லூரியில் ஜாதிய அடக்குமுறையை பேசிய பரியேறும் பெருமாள்

    பின்னர் பா.ரஞ்சித் தயாரிப்பில் 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்கினார். தமிழ் சினிமா வரலாற்றில் தலித் மக்களின் பிரச்சினையை வேறு கோணத்தில் அணுகிய படம். வித்தியாசமான கதையமைப்பு, கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்திய படம். கவுரமான நிலை நாங்கள் போட்ட பிச்சை என்கிற வரியும், கல்லூரிகளில் நடக்கும் ஜாதிய ரீதியான வன்முறை, ஒடுக்குமுறைகளையும் ஆழமாக சொன்ன படம். ”என்னை கடுமையாக தாக்கினார்கள், நான் பேய் மாதிரி படிச்சேன், கல்வி என்னை உயர்த்தியது, அன்று என்னை அடித்தவன் எல்லாம் இன்று என் முன் கைக்கட்டி நிற்கிறான் ஆகவே படி கல்வி ஒன்றே உயர்த்தும்" என்று கல்லூரி முதல்வர் கேரக்டர் சொல்வதாக காட்சி அமைத்தது மாரி செல்வராஜின் நவீன சிந்தனையை காட்டியது.

    எளிய மக்களுக்கு எதிரான அடக்குமுறையை பதிவு செய்த கர்ணன்

    எளிய மக்களுக்கு எதிரான அடக்குமுறையை பதிவு செய்த கர்ணன்

    அதேபோல் கர்ணன் படம் இன்று கிராமங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளையும், சிறிய உரிமைக்காக கூட போராடக்கூடாது என்கிற அடக்குமுறையையும், பெண்கள் கல்விக்கற்க செல்லும்போது அடையும் சிரமங்களையும் காட்டியது. போலீஸ் அடக்குமுறைக்காட்சிகள் சினிமாக்காட்சிகள் அல்ல, அது நிஜத்தில் பல கிராமங்களில் நடந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் ஒரு தனி நபர் அனைத்தையும் மாற்றுகிறார் என்கிற கதைப்போக்கு ஏற்றுக்கொள்ள முடியாது சினிமாவுக்காக அமைக்கப்பட்டது என்றாலும் வலியைச் சொன்னவிதம் அவர் சிறந்த இயக்குநர் என்பதை காட்டியது.

    மக்களின் படைப்பாளர்

    மக்களின் படைப்பாளர்

    ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சினிமா பல தடங்களை பதிய வைத்து பல முன்னேற்றங்களை எதிர்கொண்டு வளர்ந்து வருகிறது. பலரும் படம் எடுக்கிறார்கள், சிலர்தான் மக்களின் படைப்பாக சமுதாய சிந்தனைகளை காட்சிப்படுத்துகிறார்கள். அதில் மாரி செல்வராஜ் பேசப்படுவார். இளம் இயக்குநராக மட்டுமல்லாமல் வெற்றி இயக்குநராக வலம் வரும் மாரி செல்வராஜ் அடுத்து ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பையும் பெறலாம். அதிலும் தரமான ஒரு படமாக தரவும் வாய்ப்புள்ளது.

    English summary
    Director Mari Selvaraj, who presented memorable works by Pariyerum Perumal and Karnan, is celebrating his birthday today. பரியேறும் பெருமாள், கர்ணன் மூலம் மனதில் பதியும் படைப்புகளை அளித்த இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X