Don't Miss!
- News
உடைந்து கிடந்த வீட்டு ஜன்னல்.. வீட்டுக்குள் வந்த ஓனர் அம்மா.. பாத்டப்பில் கண்ட காட்சி.. கொடுமையே
- Sports
விராட் கோலியின் வீக்னஸ் இதுதான்.. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜாம்பவான் கூறிய பலே ஐடியா.. தப்பிப்பாரா??
- Lifestyle
இந்த 4 ராசிக்காரர்களால் காதலில் ஏமாற்றாமல் இருக்க முடியாதாம்... இவங்கள காதலிக்கிறவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிவகார்த்திகேயனுடன் கூட்டணிக்கு ரெடியான இயக்குநர் மிஷ்கின்: இது கொஞ்சம் புது அப்டேட்டா இருக்குதே!
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தொடர்ந்து கமர்சியல் படங்களில் நடித்து வருகிறார்.
அதேபோல், வித்தியாசமான திரில்லர் ஜானர் படங்கள் மூலம் அசத்தி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.
இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் பேசி வந்த நிலையில், இப்போது சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஷங்கர் மகளை ஜோடியாக்கிய சிவகார்த்திகேயன்.. அப்போ கியாரா அத்வானி கிடையாதா? எந்த படத்தில் தெரியுமா?

கோலிவுட்டின் கமர்சியல் ஹீரோ
சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்குள் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயனின் பெரிய பலமே, அவரது காமெடியும் இயல்பான உடல்மொழியும் தான். அதனால் கமர்சியல் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வரும் அவர், எப்போது புதிய கதைக்களங்கள் கொண்ட படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

மாவீரன் அவதாரம்
சமீபத்தில் வெளியான 'டான்' படத்தை சூப்பர் ஹிட்டாக கொடுத்த சிவகார்த்திகேயன், தற்போது 'பிரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்தப் படமும் ஜாலியான ஸ்டோரியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக தேசிய விருது இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் உருவாகிறது.

அதிதியுடன் டூயட் பாட ரெடி
'மாவீரன்' படத்தின் பூஜை சென்னையில் நேற்று மிக எளிமையாக நடைபெற்றுள்ளது. இதில், பிரம்மாண்ட இயக்குநர் சங்கரும் கலந்துகொண்டார். அதற்கு காரணம், விருமன் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் அவரது மகள் அதிதி தான், 'மாவிரன்' படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார். புதிய காம்போவான சிவகார்த்திகேயன் - அதிதியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என, விரைவில் திரையில் பார்க்கலாம்.

இயக்குநர் மிஷ்கினுடன் புதிய கூட்டணி
இந்நிலையில், 'மாவீரன்' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அப்டேட்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. விது அயன்னா ஒளிப்பதிவாளராகவும், பிலோமின் ராஜ் எடிட்டராகவும், பரத் சங்கர் இசையமைப்பாளராகவும் கமிட் ஆகியுள்ளனர். இதனிடையே இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் மிஷ்கினும் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகிறாரா?
'மாவீரன்' படத்தில் மிஷ்கின் நடிப்பதுக் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. முதலில் இது வதந்தி எனக் கூறப்பட்டாலும், இப்போது மிஷ்கின் நடிப்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. அதனால், விரைவில் 'மாவீரன்' படத்தில் மிஷ்கின் நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மிஷ்கின் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கலாம் எனவும் தெரிகிறது.