திரெளபதி டைரக்டர் அடுத்து இயக்க போவது இவரையா... வெளியான சூப்பர் அறிவிப்பு

சென்னை : திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கி பிரபலமானவர் டைரக்டர் மோகன் ஸத்ரியன். பழைய வண்ணாரபேட்டை படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான மோகன், திரெளபதி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

மோகனின் படங்களில் ஜாதியை அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும். இவர் இயக்கிய திரெளபதி, ருத்ர தாண்டவம் ஆகிய இரண்டு படங்களிலும் ரிச்சர்ட் ரிஷி தான் ஹீரோவாக நடித்தார். இந்த இரு படங்களுமே பெரிய அளவில் பேசப்பட்டன.

Director Mohan.G Kshatriyan to direct Selvaraghavan in his next

இதனால் மோகன் அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்பட்டது. இன்று மாலை தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட போவதாக மோகன் ஏற்கனவே ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தனர்.

மோகன் அடுத்தபடியாக டைரக்டர் செல்வராகவனை இயக்க போகிறாராம். இது தனது வழக்கமான படங்களை போல் இல்லாமல் முற்றிலும் பொழுதுபோக்கு படமாக எடுக்க மோகன் திட்டமிட்டுள்ளாராம். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க செல்வராகவன் ஓகே சொல்லி விட்டாராம். யாரும் எதிர்பாராத இந்த கூட்டணியால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் செல்வராகவன், சாணி காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்துள்ளார். சாணி காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி உள்ள செல்வராகவன், தற்போது டைரக்டர் நெல்சன் திலீப்குமார், விஜய்யை ஹீரோவாக வைத்து இயக்கும் பீஸ்ட் படத்தில் வில்லனாகவும் அறிமுகமாக உள்ளார்.

அதே சமயம் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தையும் இயக்கி வருகிறார். இதற்கிடையில் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் நடிக்க உள்ள படத்தின் மீதான எதிர்பார்த்து அதிகரித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் டைட்டில், மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக மோகன் ட்விட்டரில் அறிவித்துள்ளார். செல்வராகவனுடன் பணியாற்றுவதை தான் பெருமையாகவும், ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்வதாக மோகன் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X