twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்க காலத்திலேயே இந்து மதம் இருந்தது.. சிலருக்கு பயம் இருக்கத்தானே செய்யும்.. மோகன் ஜி பேட்டி!

    |

    சென்னை: பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ஒரு பக்கம் வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் ராஜ ராஜ சோழன் இந்துவா, சைவமா என்கிற பெரிய விவாதமே சென்று கொண்டிருக்கிறது.

    இயக்குநர் வெற்றிமாறன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் ராஜ ராஜ சோழன் இந்து அரசன் இல்லை என்று கூறியது தேசிய அளவில் விவாத பொருள் ஆகி உள்ளது.

    இந்நிலையில், இயக்குநர் மோகன் ஜி இந்த விவாதம் குறித்தும் அடுத்ததாக சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என அனைத்து மன்னர்களின் புகழ் பாடும் படங்களும் வரும் என கொளுத்திப் போட்டுள்ளார்.

    டிவிட்டரில் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ்… தளபதி 67 அப்டேட்டோட ரெடியா வந்துருக்கார்யா மனுஷன்!டிவிட்டரில் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ்… தளபதி 67 அப்டேட்டோட ரெடியா வந்துருக்கார்யா மனுஷன்!

    ராஜ ராஜ சோழன் சர்ச்சை

    ராஜ ராஜ சோழன் சர்ச்சை

    பொன்னியின் செல்வன் படம் வெளியான நிலையில், அந்த படத்தில் அருள்மொழி வர்மனாக வருபவர் தான் பிற்காலத்தில் ராஜ ராஜ சோழன் என்கிற பெயரில் சோழ தேசத்தையே ஆட்சி புரிந்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலையும் கட்டினார். அவர் செய்த சாதனைகள் பற்றி பேசாமல், அவர் குலத்தை பற்றிய ஆராய்ச்சி பெரிய சர்ச்சையை கிளப்பி உள்ளது என சரத்குமார் பேசியிருந்தார்.

    பகாசூரன் இயக்குநர்

    பகாசூரன் இயக்குநர்

    திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி அடுத்ததாக செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி உள்ளார். வரும் நவம்பர் மாதம் பகாசூரன் படம் வெளியாகும் என பேசிய அவரிடம், ராஜ ராஜ சோழன் குறித்த சர்ச்சை ஆரம்பித்துள்ளதே அதை பற்றிய உங்கள் கருத்து என்ன என்கிற கேள்வியை எழுப்ப, அதிரடியாக பலவற்றை பேசி பற்ற வைத்துள்ளார்.

    இந்துக்கள் ஒன்று சேரக் கூடாது

    இந்துக்கள் ஒன்று சேரக் கூடாது

    பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மக்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், சிலருக்கு பயத்தை உருவாக்கி இருக்கும், இதுபோன்ற பிரச்சனையும் வரத்தானே செய்யும். இந்துக்கள் ஒன்று சேர்ந்து விடக் கூடாது என்பதால் தான் சைவம், வைணவம் என பிரித்து பேசுகின்றனர். அனைத்தும் ஒன்று சேர்ந்தது தான் இந்து அதற்கான சான்றுகள் சங்க காலத்திலேயே இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஒன்றும் இந்து என்கிற பெயரை வைக்கவில்லை என வெற்றிமாறன் மற்றும் கமல் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    சேர, பாண்டியர்களின் வரலாறு

    சேர, பாண்டியர்களின் வரலாறு

    சோழர் கொடி பொன்னியின் செல்வன் மூலமாக பறந்து வரும் நிலையில், இனிமேல் சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள் என தமிழ் மண்ணை ஆண்ட பல மன்னர்களின் வரலாறுகளும் அரசியல்களும் சினிமாவாக வரத்தான் செய்யும். பகாசூரன் வெளியானால், மேலும், பல சர்ச்சைகள் கிளம்பும் என பகீர் கிளப்பி உள்ளார்.

    English summary
    Director Mohan G says Hindu religion exists from Sangam Periods itself in recent media interactions stirs another debate in social media. His upcoming film Bakasuran will release on this November.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X