Mysskin Speech: நான் பெரிய பருப்பு தான்.. மிஷ்கினின் அதிரடி பேச்சு!

சென்னை: தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தீபாவளி விருந்தாக டீசல் படம் வெளியாக உள்ளது. காதல் நாயகனாக தொடக்க காலத்தில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் சமீபகாலமாக கதைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விற்பனையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட் நிறுவனம், எஸ்பி சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்தை, திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், போஸ் வெங்கட், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின கதேகர், ஜாகிர் உசேன், தங்கதுரை, மாறன், கேபிஒய் தீனா, அபூர்வா சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

Diesel Mysskin speech
Photo Credit:

இயக்குநர் மிஷ்கின்: டீசல் படத்தின் இசை விழா நடைபெற்றது இதில் பேசிய மிஷ்கின், நான் இன்னும் பழைய திரைப்படங்களைத் தான் பாரக்கிறேன். உதாரணமாக 15 வருடத்திற்கு முன்பு வந்த ஸ்பெக்டர் என்கிற படத்தை நான் பார்க்கிறேன். அந்த படத்தில் இருக்கும் 3 காட்சிக்காக நான் 15 வருடமாக வேலை செய்து கொண்டே இருக்கிறேன். படத்தை நான் பார்ப்பது இல்லை படத்திற்காக நான் வேலை செய்கிறேன்.
காந்தாரா திரைப்படத்தை அரை மணி நேரம் மட்டுமே பார்த்தேன். நான் என்டர்டைன்மெண்டுக்காக படத்தை பார்க்கவில்லை. ஒரு படத்தை பார்ப்பது என்னுடைய வேலைக்காக, இப்படி நான் சொல்வதன் மூலமாக நான் பெரிய பருப்பு என்பதெல்லாம் கிடையாது? அதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பெரிய பருப்பு தான்: ஒரு செருப்பு தைப்பவர் கலைஞன் எத்தனை விதமான தோல்களை பார்த்திருப்பார், எத்தனை விதமான நூல்கள், செருப்பு தைப்பதற்கான ஊசி எப்படி கூர்மையாக இருக்க வேண்டும் என அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேபோல சினிமாவில் 24 கிராஃப்ட் இருக்கிறது. நான் சாகும் வரை சினிமாவிற்கு வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும். சினிமாவை நான் எப்பொழுதும் ஒரு பொழுதுபோக்காக பார்க்க மாட்டேன். சினிமா என்னுடைய தாய், என்னுடைய கடவுள். யாரும் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் பெரிய பருப்புதான் என்றார். மேலும், இந்த படத்தை பற்றி நான் பேசியது பெரிய அளவில் விளம்பரம் ஆகிவிட்டது. இதற்காக தயாரிப்பாளர் எனக்கு நிச்சயமாக பணம் தர வேண்டும் என கிண்டலாக பேசி அனைவரையும் சிரிக்க வைத்தார் மிஷ்கின்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X