Don't Miss!
- News
இளம்பெண் சரஸ்வதி கொடூரக் கொலை: நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ்
- Automobiles
வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்த மாருதி சுஸுகி!! கார்களின் விலைகள் ரூ.22,500 வரையில் அதிகரிப்பு!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 17.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் கொடுக்கல் வாங்கலைத் தவிர்க்கவும்…
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா.. எந்த மாதிரி கதை தெரியுமா!
சென்னை : சமீபத்தில் வெளியாகியிருந்த குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படம் திரை அரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இவரின் இயக்கத்தில் வெளியான சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற தனித்துவமான படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
குட்டி ஸ்டோரியில் இவரது பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் பாராட்ட வைத்ததை அடுத்து நடிகர் ஆர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

திறமையான படைப்புகளை
இயக்குனர் நடிகர் திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டுள்ள இயக்குனர் நலன் குமாரசாமி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையான படைப்புகளை பறைசாற்றிய இவருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

திரைக்கதை ஆசிரியராக
விஜய் சேதுபதி என்றாலே தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார் என்ற பெயர் இருந்து வரும் நிலையில் விஜய் சேதுபதி முதன்முறையாக வயதான தோற்றத்தில் நடித்த சூதுகவ்வும் திரைப்படம் இன்றுவரை தமிழ் சினிமாவின் பெஞ்ச் மார்காக இருந்து வர நலன் குமாரசாமி இந்தப் படத்தை இயக்கியிருந்தார். பீட்சா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அனைவராலும் ரசிக்கக்கூடிய
அதன்பிறகு இயக்கிய காதலும் கடந்து போகும் படத்திலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்க பிரபல கொரியன் திரைப்படத்தின் ரீமேக் என சொல்லப்படும் இந்த படம் வெளியான புதிதில் இந்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் வசூலில் பின்தங்கியே இருந்தது என்றாலும் இன்று வரை அனைவராலும் ரசிக்கக்கூடிய மிகச்சிறந்த படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆடல் பாடல்
காதலும் கடந்து போகும் படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படத்தையும் இயக்க ஆர்வம் காட்டாத நலன் குமாரசாமி மாயவன், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றி இருக்க கடந்த காதலர் தினத்துக்கு வெளியான குட்டி ஸ்டோரி ஆந்தாலஜி திரைப்படத்தில் ஆடல் பாடல் என்ற பகுதியை இயக்கி அதில் வெற்றியும் பெற்றிருந்தார்.

ஆர்யாவுடன் இணைய
இயக்குனர் நலன் குமாரசாமியின் படங்கள் என்றாலே புதுமையான கதைகளத்தோடும் ரசிகர்கள் விரும்பும் வகையிலும் இருக்க இவரின் அடுத்த திரைப்படத்தை எதிர்நோக்கி உள்ள ரசிகர்களுக்கு இன்ப செய்தி அளிக்கும் விதமாக நடிகர் ஆர்யாவுடன் இணைய உள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படம் ஒரு ஃபேன்டஸி திரில்லர் கதை எனவும் நடிகர் ஆர்யா இதுவரை நடித்திராத ஸ்டோரி எனவும் சொல்லப்படும் நிலையில் இதன் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்கப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாகும்.