29வது பிறந்தநாள் அன்று வீட்டில் பிணமாகக் கிடந்த பெண் இயக்குநர்

By Siva

திருவனந்தபுரம்: மலையாள இயக்குநர் நயனா சூரியன் தன் வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கருநாகப்பள்ளியை சேர்ந்தவர் நயனா சூரியன்(29). அவர் வெள்ளையம்பாளையம் அருகே உள்ள அல்தரா ஜங்ஷன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.

அவர் பிரபல இயக்குநர் லெனின் ஜோசபிடம் உதவியாளராக இருந்து இயக்குநர் ஆனவர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

சனிக்கிழமை நயனாவின் 29வது பிறந்தநாள் ஆகும். அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரின் தாய் போன் செய்தபோது நயனா எடுக்கவில்லை. இதையடுத்து அவர் நயனாவின் தோழிகளுக்கு போன் செய்து தனது மகளுக்கு போன் செய்தால் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

வீடு

வீடு

தோழிகளும் நயனாவுக்கு போன் செய்ய அவர் எடுக்கவில்லை. இதையடுத்து தோழிகள் ஞாயிற்றுக்கிழமை காலை நயனாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளரிடம் இருந்த மற்றொரு சாவியை வாங்கி கதவை திறந்து உள்ளே சென்றாால் படுக்கையறை உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது.

மரணம்

மரணம்

படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நயனா பிணமாகக் கிடந்தார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நயனாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நயனா சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறந்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோகம்

சோகம்

லெனின் ஜோசப் கடந்த மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். அதில் இருந்து சோகத்தில் இருந்த நயனா சரியாக சாப்பிடவில்லையாம். சர்க்கரை நோய் இருந்த நிலையில் நயனா சாப்பிடாததால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்து அவர் இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. லெனின் இறந்த 41வது நாள் நயனா இறந்துள்ளார்.

படம்

படம்

நயனா பல விளம்பர படங்களை இயக்கியதுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். நயனா இயக்குநர்கள் டாக்டர் பிஜு, ஜிது ஜோசப் ஆகியோரிடமும் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவர் இயக்கிய பக்ஷகளுடே மணம் படம் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X