»   »  'செந்தூரப்பூவே' சினிமா இயக்குநர் பி.ஆர்.தேவராஜ் விபத்தில் மரணம்

'செந்தூரப்பூவே' சினிமா இயக்குநர் பி.ஆர்.தேவராஜ் விபத்தில் மரணம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திரைப்பட இயக்குநர் பி.ஆர்.தேவராஜ் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு வயது 63. சென்னையிலிருந்து ஹைதாரபாத் சென்ற போது விபத்தில் சிக்கிய தேவராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை காலை மரணமடைந்தார்.

கோவை மாவட்டம் புளியமரத்துப்பாளையம் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட பி.ஆர்.தேவராஜ், 1988ல் விஜயகாந்த், ராம்கி, நிரோஷா நடித்த ‘செந்தூரப் பூவே' படத்தை இயக்கினார். பிறகு 1995ல் ‘இளையராகம்' என்ற படத்தை இயக்கிய அவர், தெலுங்கில் ஏராளமான டி.வி தொடர்களையும் இயக்கியுள்ளார்.

Director P.R.Devaraj dies in accident

இவர், தனது நண்பர்களுடன் கோயமுத்தூரில் இருந்து காரில் நேற்று முன்தினம் ஹைதராபாத் சென்று கொண்டிருந்தார். கர்னூல் அருகில் உள்ள தோனே என்ற இடத்தில் சென்றபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தேவராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் தேவராஜ் மரணமடைந்தார். பின்னர் அவரது உடல் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நேற்று மாலை கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப் பட்டது. மறைந்த தேவராஜுக்கு மனைவி சந்திரா, மகன்கள் சித்தார்த், சஞ்சீவ் உள்ளனர். தொடர்புக்கு 044-28344485.

English summary
Director PR Devraj who made the classic movie Sindhura Puvva in Tamil and Telugu is no more. The director died in a road mishap today. He was 57 years old.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil