Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தினமும் 4 மணிநேரம்.. விக்ரம் குறித்த சுவாரஸ்யம் பகிர்ந்த டைரக்டர் பா ரஞ்சித்
சென்னை : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் பா ரஞ்சித் டைரக்ஷனில் விக்ரம் இணைந்துள்ள படம் தங்கலான்.
கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. தற்போது இந்தப்படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
அடுத்தக் கட்டமாக படக்குழுவினர் கர்நாடகாவில் சூட்டிங் நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு
கூட்டு
கிளியான
வெற்றிமாறன்,
வெங்கட்
பிரபு,
பா
ரஞ்சித்…
விஜய்
ஆண்டனி
வெளியிட்ட
மேக்கிங்
வீடியோ!

இயக்குநர் பா ரஞ்சித்தின் தங்கலான்
கோலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளாக உள்ள பா ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் கைக்கோர்த்துள்ளார். படத்திற்கு தங்கலான் என்று பெயரிடப்பட்டுள்ளது. கேஜிப் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக இந்தப் படத்தில் எடுத்துக் கொண்டுள்ளார். முன்னதாக யாஷ் நடிப்பில் கேஜிஎப் படம் இரண்டு பாகங்களாக வெளியான நிலையில், தற்போது இந்தப் படம் அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கையை கூறும்வகையில் படமாக்கப்பட்டு வருகிறது.

வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம்
19ம் நூற்றாண்டு காலகட்டத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ள நிலையில், தற்போது சென்னை ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக வித்தியாசமான கெட்டப்பில் நடிகர் விக்ரமை பார்க்க முடிகிறது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

விக்ரமின் கடந்த ஆண்டு படங்கள்
வித்தியாசமான கெட்டப்புகளை போடுவதில் மிகவும் வல்லவராக இருந்து வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் இவரது கெட்டப்புகள் மிகுந்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக கோப்ரா படத்தில் அதிகமான மற்றும் சிறப்பான கெட்டப்புகளுடன் இவரை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தங்கலான் படத்திலும் இது தொடர்கிறது.

கர்நாடகா செல்லும் படக்குழு
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக கர்நாடகாவிற்கு படக்குழு செல்லவுள்ளது. அங்கு அடுத்தக்கட்டமாக கேஜிஎப் பகுதிகளில் முக்கியமான காட்சிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பூனேவிற்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்த இயக்குநர் பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, நடிகர் விக்ரமின் நடிப்பு குறித்து அவர் சிலாகித்து பேசியுள்ளார்.

விக்ரமிற்கு பா ரஞ்சித் பாராட்டு
விக்ரம் இந்தப் படத்தின் காட்சிகளுக்காக மிகவும் மெனக்கெட்டு நடித்து வருவதாகவும் அவரது நடிப்பு ரசிகர்களை கண்டிப்பாக 19ம் நூற்றாண்டிற்கே அழைத்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் மக்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் கேரக்டராக தன்னை மாற்றிக் கொள்ள தினந்தோறும் மேக்கப்பிற்காக 4 மணிநேரம் விக்ரம் செலவிடுவதாகவும் அவரது அர்ப்பணிப்பு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் பா ரஞ்சித் மேலும் கூறியுள்ளார்.

கைக்கொடுக்குமா தங்கலான்?
நடிகர்
விக்ரம்
நடிப்பில்
கடந்த
ஆண்டில்
பொன்னியின்
செல்வன்
மற்றும்
கோப்ரா
ஆகிய
படங்கள்
வெளியான
நிலையில்
இதில்
பொன்னியின்
செல்வன்
படம்
அவருக்கு
சிறப்பாக
கைக்கொடுத்தது.
கோப்ரா
படம்
அதிகமான
பொருட்செலவில்
சிறப்பாக
எடுக்கப்பட்டது.
ஆனால்
இந்தப்
படம்
திரைக்கதையில்
சொதப்பிய
நிலையில்,
ரசிகர்களை
கவரத்
தவறியது.
இந்நிலையில்
தற்போது
தங்கலான்
படம்
அவருக்கு
கைக்கொடுக்கும்
என்று
எதிர்பார்க்கப்படுகிறது.