»   »  இந்த 'காதல்' இந்த சமூகத்தை சும்மா விடாது...!- இயக்குநர் பா .ரஞ்சித்

இந்த 'காதல்' இந்த சமூகத்தை சும்மா விடாது...!- இயக்குநர் பா .ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

'காதல்' இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு என்று இயக்குநர் பா ரஞ்சித் பேசினார்.

சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீ திவ்யா நடித்துள்ள படம் மாவீரன் கிட்டு. ஐஸ்வர் சந்திர சாமி, டிஎன் தாய் சரவணன் தயாரித்துள்ளனர்.

Director Pa Ranjith's speech at Maaveeran Kittu audio launch

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், "பொதுவாக தமிழ் சினிமாவில் கிராமங்கள் என்னவாக இருக்கின்றன, கிராமங்களின் தெருக்கள் என்னவாக இருக்கின்றன... கிராமங்களில் வாழும் மக்கள், எப்படிப்பட்ட அடையாளமாக இருக்கிறார்கள் என்பதைப்பற்றி எனக்குள் ஒரு கேள்வி இருந்து வந்தது. முதன் முதலாக வெண்ணிலா கபடிக்குழு படம் பார்த்தபோது கிராமங்களில் இருக்கக் கூடிய அரசியல், அதுவும் விளையாட்டில் இருக்கும் அரசியலை மிக அழகாக ஒரு வணிகசினிமாவில் காட்சி படுத்தியிருந்தார் சுசீந்திரன்.

அதே போல இன்றைய கிராமங்களில் பொதுப் பயன்பாட்டிற்குள் இருக்கிற அரசு பொதுவுடைமை என்னவாயிருக்கிறது, யாருடைய சொந்தமாயிருக்கிறது என்கிற ஒரு கேள்வியிருக்கிறது. அந்தக் கேள்விக்கு இந்தப்படம் நிச்சயமாக ஒரு பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன் .

இந்தப் படத்தில் வரும் டிரெயிலரும், பாடல்களும் அதைத்தான் திருப்பித் திருப்பி சொல்கின்றன. இந்த 'காதல்' இருக்கிறதே அது சும்மாயிருக்காது. 'மாவீரன் கிட்டு' படத்தில் வரும் இந்த வசனம் கண்டிப்பாக சலசலப்பை உண்டுபண்ணும். 'காதல்' இந்த சமூகத்தை மாற்றியே தீரும். சமூகத்தில் காதலால் மட்டுமே புரட்சியை உண்டு பண்ண முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு .

அந்த வகையில் சுசீந்திரன், யுகபாரதி, இமான் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் சமூகத்துக்கான நல்ல கருத்துக்களை பேசக்கூடிய படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தமாதிரியான படங்கள் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றால் மட்டுமே தொடர்ந்து இந்தமாதிரியான படங்கள் எடுக்கமுடியும் என்கிற நம்பிக்கை கலைஞர்களுக்கு ஏற்படும். தயாரிப்பாளர்களும் தயாரிக்க முன்வருவார்கள். தமிழ் ரசிகர்கள் எந்தப்படத்தையும் தரம்பிரித்துப் பார்ப்பதில்லை. இந்தப்படம் கமர்சியல் ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.

English summary
Director Pa Ranjith wished the crew of Maaveeran Kittu at the audio launch of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil