»   »  'சினிமாவில் கிடைக்கும் பிரபலம் மூலம் நல்லது செய்யும் மைம் கோபி!'- பாண்டிராஜ் பாராட்டு

'சினிமாவில் கிடைக்கும் பிரபலம் மூலம் நல்லது செய்யும் மைம் கோபி!'- பாண்டிராஜ் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி மைம் ஸ்டுடியோ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருகிறார்.

கபாலியில் ரஜினியுடன் நடித்துள்ள கோபி ஆண்டுதோறும் தனது 'மைம்' நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இந்த ஆண்டு ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மா என்ற நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் சனிக்கிழமை நடத்தினார்.

Director Pandiraj praises Mime Gopi

அரங்கு நிரம்பி வழிந்தது பார்வையாளர்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்களால்.

நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது.

விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .

விழாவில் பேசிய இயக்குநர் பாண்டிராஜ், "மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழச்சி ...தனக்கு கிடைக்கும் சினிமா புகழைப் பயன்படுத்தி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன்.

Director Pandiraj praises Mime Gopi

சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும், நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .

நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன். இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம். கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல இயக்குநராக எனக்குத் தெரிகிறார். தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு," என்றார்.

Director Pandiraj praises Mime Gopi

இயக்குநர் கரு பழனியப்பன், கோபியின் முயற்சிகளைப் பாராட்டினார். மைம் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

விழாவில் இயக்குநர்கள் சுசீந்திரன், மகிழ் திருமேனி, பாலாஜி மோகன், சிவா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் கிஷோர், காளி வெங்கட், சரவணன், பாண்டி, முரளி, ஆத்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

English summary
Director Pandiraj has praised Mime Gopi for his outstanding performances.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil