விஜய்யை அந்த கெட்அப்பில் பார்க்கணும்...ஆசையை ஓப்பனாக சொன்ன டைரக்டர்
சென்னை : விஜய்யை அடுத்து இயக்க போகிறவர்கள் என பலரின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கையில், தானும் விஜய்யிடம் கதை சொன்னதாக ஹிட் படம் டைரக்டர் ஒருவர் கூறி உள்ளார். ஆதோடு விஜய்யை அந்த ரோலில் பார்க்க வேண்டும் என ஆசையாக இருப்பதாக தனது ஆசையை ஓப்பனாக சொல்லி உள்ளார்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி 66 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் விஜய். டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய்யின் லுக் பற்றிய போட்டோவை பிரகாஷ் ராஜ் பகிர்ந்திருந்தார். இந்த போட்டோ செம டிரெண்டானது. தளபதி 66 படம் வித்தியாசமான குடும்ப சென்டிமென்ட் படம் என கூறப்படுவதால் படத்தை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தளபதி 67 கன்ஃபார்ம் செய்த லோகேஷ்
தளபதி 66 பற்றி பல தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில் விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ், தளபதி 67 படத்தை தான் இயக்க உள்ளதை கன்ஃபார்ம் செய்தார். இதனால் தளபதி 66 படத்தை விட்டு விட்டு, தளபதி 67 பட அப்டேட்டில் ஆர்வம் காட்ட துவங்கி விட்டனர் ரசிகர்கள்.

இவரும் கதை சொன்னாரா
வம்சி பைடபள்ளியுடன் தளபதி 66, லோகேஷ் கனகராஜுடன் தளபதி 67 படங்களை முடித்த பிறகு அட்லியுடன் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யிடம் தானும் ஒரு கதை கூறி இருப்பதாக டைரக்டர் பேரரசு தெரிவித்துள்ளார். விஜய்யின் திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு மீண்டும் ஒரு படத்தை இணைய போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

விஜய் பெரிய ஜீனியஸ்
பேரரசு தனது பேட்டியில், ஒரு முறைக்கு பல முறை கதை கேட்டு தான் விஜய் முடிவு செய்வார். பெரிய டைரக்டர், தயாரிப்பாளர் என்பதற்காக அவர் ஓகே சொல்ல மாட்டார். கதை பிடித்திருந்தால் மட்டும் தான் அவர் ஓகே சொல்லுவார். கதை தேர்வு செய்வதில் அவர் பெரிய ஜீனியஸ். கொரோனாவிற்கு முன், சர்கார் படம் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் கடைசியாக விஜய்யை சந்தித்து ஒரு கதை கூறினேன். அது முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான கதை. சர்காரும் அரசியல் படம் என்பதால், வரிசையாக அரசியல் படங்கள் வேண்டாம். பிறகு பார்த்து கொள்ளலாம். வேறு ஏதாவது கதையை தயார் செய்யுங்கள் என விஜய் கூறி விட்டார்.

விஜய் இந்த கெட்அப்பில் நடிக்கனும்
வரிசையாக துப்பாக்கியுடன் இருக்கும் கதைகளிலேயே விஜய் நடிக்கிறார். ஒரு கிராமத்துக்காரனாகவும், ரசிகராகவும் கிராமத்து கதைகளில், வேட்டி கட்டியும் அவர் படங்கள் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். அதே போல் விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் சென்டிமென்ட் படங்களிலும் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி உள்ளார்.

என்ன இவர் இப்படி சொல்கிறார்
பீஸ்ட் படத்தின் தோல்விக்கு, சரியான கதை தேர்வு இல்லாதது தான் காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. படத்தின் கதையை தேர்வு செய்வதில் விஜய் கோட்டை விட்டு விட்டார். டைரக்டர் நெல்சனும் திரைக்கதையில் கவனம் செலுத்தாமல், விஜய்யை மட்டுமே கவனம் செலுத்தியதால் தான் பீஸ்ட் படம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது என குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு நேர் எதிராக டைரக்டர் பேரரசு இப்படி கூறி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











