»   »  "திகுதிகு" திகார்... அலற வைக்க வரும் பேரரசுவின் அதிரடிப் படம்

"திகுதிகு" திகார்... அலற வைக்க வரும் பேரரசுவின் அதிரடிப் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பேரரசு இயக்கத்தில் இயக்குநர் - நடிகர் பார்த்திபன் நடிக்கும் திகார் இம்மாதம் வெளியாகவுள்ளது.

பியானோ பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரேகா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்தான் திகார்.

மிக பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ள இந்த படத்தில் பார்த்திபன் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

அகன்ஷா பூரியும்.. உன்னி முகுந்தனும்

அகன்ஷா பூரியும்.. உன்னி முகுந்தனும்

திகார் படத்தில் இளம் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, கதாநாயகியாக அகன்ஷா பூரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ்.கே.ஜெயன், ஆகியோரும் நடிக்கிறார்கள்

எழுதி இயக்கி பாட்டும்

எழுதி இயக்கி பாட்டும்

இப்படத்திற்கான கதையை எழுதி இயக்கியதுடன் அணைத்து பாடல்களையும் எழுதி இருப்பவர் பேரரசு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருவதால் படத்தைப் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ளாராம் பேரரசு.

நம்பர் ஒன் தாதா பாஸ்

நம்பர் ஒன் தாதா பாஸ்

திகார் படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டோம்... நம்பர் ஒன் தாதாவின் வாழ்கையை இதில் பதிவு செய்து உள்ளோம். பார்த்திபன் இந்த படத்தில் படு பயங்கர தாதாவாக நடிக்கிறார்.

பெருமையாச்சே

பெருமையாச்சே

அந்த கதாப்பாத்திரம் வலுவுள்ளதாக இருந்ததால் இப்படிப் பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று பெருமையாக சொல்லி இருக்கிறார் பார்த்திபன்.

அதிக பொருட் செலவு

அதிக பொருட் செலவு

திகார் படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய், போன்ற இடங்களில் அதிக பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம்.

இதுவரை இல்லாத சண்டை

இதுவரை இல்லாத சண்டை

இதற்கு முன் வெளியான எந்த படத்திலும் இந்தளவு சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை என்கிற அளவுக்கு ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும். படம் இம்மாதம் 21 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்றார் பேரரசு.

English summary
Tihar is a Tamil movie, Directed by Perarasu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil